1. Home
  2. விளையாட்டு

இந்திய ஓபன்: காலிறுதியில் சிந்து, சாய்னா

இந்திய ஓபன்: காலிறுதியில் சிந்து, சாய்னா


இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து உலகின் 3ம் நிலை வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெளியேற்றப்பட்டுள்ளார். பெண்கள் பிரிவில், சிந்து, சாய்னா காலிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

டெல்லியில் இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் ஶ்ரீகாந்த் கிடாம்பியும், மலேசியாவின் இஸ்கந்தர் ஸுல்கர்ணைனும் மோதினர். இதில், ஸுல்கர்ணைனிடம் 21-19, 21-17 என்ற நேர்செட் கணக்கில் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். கடந்த ஆண்டு ஸ்ரீகாந்த் நான்கு சூப்பர் சீரிஸ் சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தார். இதன் பின், காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், இந்த ஆண்டுப் போட்டிகளில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறி வருகிறார்.

ஆண்கள் பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், பருப்பள்ளி காஷ்யப் 21-19, 19-21, 12-21 என்ற கணக்கில் தகுதிச் சுற்று வீரரை தோற்கடித்துக் காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டியில் காஷ்யப், சீன வீரர் க்கையோ பின்னை எதிர்கொள்கிறார்.


பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் காலிறுதி போட்டிக்கு முன்னேறியிருக்கின்றனர். காலிறுதியில் சிந்து ஸ்பெயினின் கரேல்ஸை எதிர்கொள்கிறார். சாய்னா, அமெரிக்காவின் பெய்வென் ஜாங்குடன் மோதுகிறார்.

ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின், காலிறுதியில் ஹாங்காங்கின் செயுங்கனை சந்திக்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவில், அஷ்வினி பொன்னப்பா- சாத்விக்ராஜ், காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் சூப்பர் சீரிஸ் போட்டியில் முதல் முறையாக இந்திய இரட்டையர் பிரிவு அணி காலிறுதியை எட்டியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like