ஆசிய பேட்மிண்டன்: மாலத்தீவு அணியை வென்றது இந்தியா

ஆசிய பேட்மிண்டன்: மாலத்தீவு அணியை வென்றது இந்தியா
 | 

ஆசிய பேட்மிண்டன்: மாலத்தீவு அணியை வென்றது இந்தியா


ஆசிய அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி, மாலத்தீவு அணியை நேற்று 5-0 என துவம்சம் செய்து வெற்றி பெற்றுள்ளது.

ஆண்கள் பிரிவில் நடந்த முதல் ஒற்றையர் ஆட்டத்தில், ஸ்ரீகாந்த் 21-5, 21-6 என்ற நேர்செட்களில் ஷாஹீத் ஹுசைனை வீழ்த்தினார். இரண்டாவது ஒற்றையர் பிரிவு போட்டியில், சாய் பிரனீத் 21-10, 21-4 என அஹ்மது நிபாயை தோற்கடித்தார். சமீர் வர்மா 21-5, 21-1 என்ற கணக்கில் முகமது அர்சலானை வென்றதால், இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றது. 

இதனை தொடர்ந்து நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் சாத்விக்ராஜ்- சிராக் இணை மற்றும் அர்ஜுன்-ராமசந்திரன் இணை தங்களுக்கான போட்டிகளில் வெற்றி அடைந்ததால், 5-0 என இந்தியா வெற்றி கண்டது. 

இன்று நடக்கும் போட்டியில் சிந்துவின் இந்திய பெண்கள் அணி, ஜப்பான் அணியையும்; இந்திய அணி, இந்தோனேஷியாவையும் எதிர்கொள்கிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP