பேட்மிண்டன் லீக் பட்டத்தை வென்றது ஹைதராபாத்!

பேட்மிண்டன் லீக்: கோப்பையை வென்றது ஹைதராபாத்!
 | 

பேட்மிண்டன் லீக் பட்டத்தை வென்றது ஹைதராபாத்!


நேற்று நடந்த பிரீமியர் லீக் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில், ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணியுடன், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் மோதியது. தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்திய ஹைதராபாத் அணி 4-3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரை தோற்கடித்து பட்டத்தை வென்றது.

முதலில் நடந்த ஆண்கள் இரட்டையர் போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்றது. அதன்பின், நடந்த டிரம்ப் போட்டியில் ஹைதராபாத் அணியின் லீ ஹியூன் இல், 15-7, 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரின் ஷுபன்கர் டேவை வீழ்த்தினார். இதனால், ஹைதராபாத் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

பின்னர் நடந்த மற்றொரு டிரம்ப் போட்டியில், உலக சாம்பியனான பெங்களூரு அணியின் விக்டர் ஆக்சல்சன், பெங்களூரின் சாய் ப்ரனீத்தை வீழ்த்தினார். மீண்டும் பெங்களூரு 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. பெண்கள் ஒற்றையர் போட்டியில், ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீராங்கனை கரோலினா மரின் கிறிஸ்டி கில்மோரை வீழ்த்தி 3-3 என சமன் செய்தார்.

கடைசியாக நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில், ஹைதராபாத் அணியின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் பியா ஸேபடையா, பெங்களூரின் கிம் ச ரங் மற்றும் சிக்கி ரெட்டி ஜோடியை 15-11, 15-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டியையும், சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP