1. Home
  2. விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: பேட்மிண்டனில் இந்தியாவிற்கு தங்கம்

காமன்வெல்த் போட்டி: பேட்மிண்டனில் இந்தியாவிற்கு தங்கம்

காமன்வெல்த் போட்டியில் இந்தியா குழு பிரிவினருக்கான கலப்பு பேட்மிண்டனில் மலேசிய அணியை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் விளையாடும் வீரர்கள் பல பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை பெற்றனர்.

இதில் இன்று நடைபெற்ற குழு பிரிவினருக்கான கலப்பு பேட்மிண்டன் இறுதிப்போட்டியில், இந்தியா- மலேசியா அணிகள் மோதின. இந்திய குழுவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால், அஸ்வினி பொன்னப்பா, என்.சிக்கிரெட்டி, சத்விக் ரங்கிரெட்டி, சிராக் சந்திரசேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆடவருக்கான ஒற்றையர் பிரவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் லீ சோங் வெய்யை வீழ்த்தினார். இதனையடுத்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் வென்று இந்தியாவிற்கான தங்கத்தை உறுதி செய்தார்.

ஒற்றையர் பிரிவு போட்டிக்கு முன், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ரங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா இணை வெற்றி பெற்றிருந்தது.

காமன்வெல்த் போட்டி வரலாற்றில் குழு பிரிவிற்கான கலப்பு பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி முதன்முறையாக தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like