1. Home
  2. விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன் காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

சீனாவில் சர்வதேச ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து, சீனாவின் ஹீ பிங் ஜியோவுடன் மோதினார். முதல் செட்டில் 17 - 21 என இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 21-17 என கைப்பற்றினார். ஆனால் மூன்றாவது செட்டில் போராடி விளையாடிய சிந்து 15-21 என இழந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த போட்டி முடிவில் சிந்து 17-21, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like