சீன வீராங்கனை வெற்றி; சாய்னா 2வது இடம்!

சையத் மோடி ட்ராபி பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால், சீனா வீராங்கனை ஹான் யுவேயிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அதேபோல, ஆடவர் இரட்டையர் பிரிவிலும் இந்திய ஜோடி சாத்விக் - சீராக் தோல்வியை தழுவியது.
 | 

சீன வீராங்கனை வெற்றி; சாய்னா 2வது இடம்!

சையத் மோடி ட்ராபி பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால், சீனா வீராங்கனை ஹான் யுவேயிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அதேபோல, ஆடவர் இரட்டையர் பிரிவிலும் இந்திய ஜோடி சாத்விக் - சிராக் தோல்வியை தழுவியது.

முன்னாள் சாம்பியன் சாய்னா நேவால், 2017 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற, ஹானுடன் மோதினார். 19 வயதேயான இளம் வீராங்கனை ஹான் மிக சிறப்பாக விளையாடினார். அவரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், சாய்னா கடுமையாக போராடினார்.

வெறும் 34 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த போட்டியில், 18-21 8-21 என நேர் செட் கணக்கில் சாய்னா தோல்வியடைந்தார். கடந்த காமன்வெல்த் போட்டிகளிலும் ஏசியன் கேம்ஸ் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்ற சாய்னா நேவால், அதன்பிறகு இந்தோனேசியா மாஸ்டர்ஸ் மற்றும் டென்மார்க் ஓபன் ஆகிய தொடர்களில் இரண்டாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாத்விக் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவை சேர்ந்த உலகின் இரண்டாம் நிலை வீரர்களான பஜர் அல்பியான் மற்றும் முகமது ரியான் அர்டியாண்டோவுடன் மோதினர். முதல் செட்டை 11-21 என இழந்தாலும், இரண்டாவது சுற்றில் 18-14 என சாத்விக் - சீராக் ஜோடி முன்னிலை பெற்றது. அதன்பின், எதிரணி வீரர்கள் விடாமுயற்சி செய்து, 20-22 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றி, நேர் செட்களில் வெற்றி பெற்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP