பேட்மிண்டன் : காலிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த சாய்னா, சிந்து

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில், இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
 | 

பேட்மிண்டன் : காலிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த சாய்னா, சிந்து

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில், இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. இதில்,  இன்று நடைபெற்ற ஒன்றையர் பிரிவு காலிறுதி சுற்றுப் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவாலும், ஜப்பானின் அக்கனே யாமகுஷியும் மோதினர். இப்போட்டியில் 13 -21, 23 -21, 16 -21 ஆகிய செட் கணக்கில் சாய்னா தோல்வியை தழுவினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, பாட்மிண்டன் தரவரிசை பட்டியலில் 17 -ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் சய் யன்யன் உடன் மோதினார். இதில் 19- 21, 9 -21 ஆகிய நேர் செட்களில் சீன வீராங்கனை வெற்றி பெற்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP