பேட்மிண்டன் லீக்: சென்னைக்கு கடைசி வாய்ப்பு!

பேட்மிண்டன் லீக்: சென்னைக்கு கடைசி வாய்ப்பு!
 | 

பேட்மிண்டன் லீக்: சென்னைக்கு கடைசி வாய்ப்பு!


பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகளில் நேற்று சென்னை ஸ்மாஷர்ஸ், பெங்களூரு பிளாஸ்ட்டர்ஸ் அணியை 3-2 என வீழ்த்தி முன்னிலை பெற்றது. இந்த வெற்றியின் மூலம், கடைசி இடத்தில் இருந்த சென்னை அணி, அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

ஆண்கள் இரட்டையர் பிரிவில், சென்னையின் லீ யாங் மற்றும் சுமித் ரெட்டி கடுமையாக போராடி வெற்றி பெற்றனர். முதல் செட்டை இழந்தாலும், பின்னர் சிறப்பாக விளையாடி, 8-15, 15-14, 15-13 என வெற்றி பெற்றனர். அதன்பின், சென்னை அணியின் கேப்டன் பிவி சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெங்களூரின் கிறிஸ்டி கில்மோரை 15-9, 15-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

ஆனால்,  ஆண்கள் ஒற்றையர் போட்டியிலும், கலப்பு இரட்டையர் போட்டியிலும், சென்னை அணி தோற்று அதிர்ச்சி கொடுத்தது. புள்ளிகளில் இரண்டு அணிகளும் 2-2 என சமன் ஆனாலும், டிரம்ப் போட்டியில் சென்னை வெற்றி பெற்றதால், 3-2 புள்ளிகள் பெற்று முன்னிலை எடுத்துள்ளது. 

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெற ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. தற்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஹைதராபாத் அணியுடன் சென்னை கடைசியாக வரும் வியாழனன்று மோதுகிறது. அதில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP