பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு - அஷ்வினி பொன்னப்பா ஆதங்கம்

இந்தியாவில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு போதிய ஊக்கமும், அங்கீகாரமும் அளிக்கப்படுவதில்லை என பேட்மிண்டன் வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
 | 

பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு - அஷ்வினி பொன்னப்பா ஆதங்கம்

இந்தியாவில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு போதிய ஊக்கமும், அங்கீகாரமும் அளிக்கப்படுவதில்லை என பேட்மிண்டன் வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்தியாவில் இரட்டையர் பிரிவு போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. ஒற்றையர் பிரிவு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் இரட்டையர் பிரிவில் இது வித்தியாசமாக உள்ளது. இங்கு அளிக்கப்படும் ஊக்கம் வித்தியாசமானது. நீங்கள் சிறப்பாக விளையாடினால் கூட அதற்கான அங்கீகாரம் கிடைக்காது. அப்படி ஒரு நடைமுறை இங்கு உள்ளது.

ஒற்றையர் பிரிவு வீரர்களுக்கு கிடைப்பது போல் இரட்டையர்  பிரிவு வீரர்களுக்கு ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை. அப்படி இருக்கையில் இனி வரும் வீரர் - வீராங்கனைகள் எப்படி இரட்டையர் பிரிவு போட்டியை தேர்வு செய்வர். இந்தியாவில் ஒற்றையர் பிரிவு வீரர்கள் எப்போதும் லைம்லைட் வெளிச்சத்தில் உள்ளனர். ஆனால் இரட்டையர் பிரிவு சாதாரண போட்டியாகவே பார்க்கப்படுகிறது. கடைசி வாய்ப்பாகவே இது கருதப்படுகிறது.

ஒற்றையர் பிரிவில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றால் இரட்டையர் பிரிவுக்கு செல்வது. மற்ற நாடுகளில் இது போல் கிடையாது. இரட்டையர் பிரிவு ஆட்டத்திற்கும் சிறப்பான ஊக்கம் அளிக்கப்படுகிறது. நீங்கள் சிறப்பாக விளையாடினால் ஒற்றையர் பிரிவு வீரர்களுக்கு அளிப்பது போல் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஜுவாலா கட்டா மற்றும் வலியவீட்டில் டிஜு ஆகியோர் சிறப்பாக விளையாடி சூப்பர் சீரிஸ் போட்டியில் முதலில் இறுதி சுற்றுக்கு சென்றனர். ஆனால் யாரும் அது குறித்து பேசவில்லை. மக்கள், ஊடகம் மற்றும் பேட்மிண்டன் அஸோசியேஷனின் மனநிலை மாற வேண்டும். இரட்டையர் பிரிவுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்" என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP