ஆசிய பேட்மின்டன் அரையிறுதி: சாய்னா இன்; சிந்து அவுட்!

ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இரண்டு முறை காமன்வெல்த்தில் தங்கம் வென்ற சாய்னா நேவால் மற்றும் நம்பர் 10ல் இடம் பிடித்திருக்கும் ஹெச்.எஸ். பிரணாய் முன்னேறியுள்ளனர்.
 | 

சீனாவின் வுகான் நகரில் நடைபெற்று ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் போட்டியில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்ந்த நேவால், கொரியாவின் லீ ஜாங் மியை எதிர்கொண்டார். 43 நிமிடம் நடந்த இப்போட்டியில் சாய்னா 21-15, 21-13 என்ற நேர்செட் கணக்கில் மியை வீழ்த்தினார். அரையிறுதியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சீன தைபேவின் தாய் ட்சு யிங்குடன், சாய்னா மோதுகிறார். 

மற்றொரு போட்டியில் 3ம் இடத்தில் இருக்கும் பி.வி. சிந்து, 19-21, 10-21 என 7ம் இடம் வகிக்கும் கொரியாவின் சுங் ஜி ஹியுனிடம் வீழ்ந்தார். 

ஆண்கள் ஒற்றையரில், நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி 12-21, 15-21 என்ற கணக்கில் மலேசியாவின் லீ ஜோங் வெயிடம் தோற்றார். 

உலக தரவரிசையில் 10ம் இடத்தில் உள்ள பிரணாய், 18-21, 23-21, 21-12 என 2ம் இடம் வகிக்கும் கொரியாவின் சான் வான் ஹோவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். அந்த ஆட்டத்தில் பிரணாய், 3ம் இடம் வகிக்கும் சென் லோங்கை சந்திக்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP