தென்னாப்பிரிக்க அணி ரசிகர்களுக்கு பேட் நியூஸ்... ஸ்டையின், ஆம்லா இன்று விளையாடவில்லை...

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் அடைந்த படுதோல்விக்கு பிறகு, வங்கதேசத்தை இன்று எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்க அணி.
 | 

தோள்பட்டை காயம் காரணமாக, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டையின் இன்றைய போட்டியிலும் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. இதேபோன்று, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயத்திலிருந்து ஆம்லா இன்னும் மீளாத  காரணத்தால் அவரும் இன்றைய ஆட்டத்தில் அனேகமாக விளையாடமாட்டார்.
தென்னாப்பிரிக்க அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் இது நல்ல செய்தி இல்லையென்றாலும், வங்கதேச அணிக்கு சாதகமான விஷயமே.

உலகக்கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம்  அடைந்த தோல்வி முகத்துடன் வங்கதேசம் இன்று களம் காண்கிறது. ஒப்பீட்டளவில் வலுவான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள மஷ்ரஃப் மொர்தாசா, முஜ்பீர் ரஹீம், ருபவ் ஹோசைல் ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பை தந்தே ஆக வேண்டும்.

தென்னாப்பிரிக்கா, வங்கதேச அணிகளின் பலம், பலவீனங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறவே இன்று அதிக வாய்ப்புள்ளது.

வி .ராமசுந்தரம் 

தொழிலதிபர் மற்றும் கிரிக்கெட் விமர்சகர் 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP