பாகிஸ்தானுக்கு 308 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 307 ரன்கள் எடுத்தது.
 | 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர்கள் ரன் எடுப்பதை தடுக்க நினைத்த பாகிஸ்தான் பவுலர்களின் ஆட்டம் எடுபடவில்லை.

துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், நிச்சயம் 300 ரன்கள் கடப்பது உறுதி என்பது தெரிந்தது. அதே போல், 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா, 307 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் 107 ரன்களும், பின்ச் 82 ரன்களும் எடுத்தனர். 

பாகிஸ்தான் பவுலர் முகமது அமீர் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் சாய்த்தார். 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாக்., வீரர்கள் களம் இறங்கவுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP