ஆசிய கோப்பை கிரிக்கெட்: 7 ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
 | 

ஆசிய கோப்பை கிரிக்கெட்: 7 ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இலங்கையின் கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா – வங்கதேசம் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து 32.4 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம். 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 7 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP