7 - 0...வா? இல்ல... 6 - 1 ...னா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இதுவரை மோதியுள்ள ஆறு ஆட்டங்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
 | 

7 - 0...வா? இல்ல... 6 - 1 ...னா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இதுவரை மோதியுள்ள ஆறு ஆட்டங்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. 

மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே இன்று நடைபெற்று வரும் போட்டியிலும் வெற்றி பெற்று, உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஏழாவது வெற்றியை இந்தியா பதிவு செய்யும் என உலகெங்கிலும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.

அதேசமயம், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவை இதுவரை வென்றதே இல்லை என்ற விதியை பாகிஸ்தான்  அணி இன்று மாற்றி எழுதும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். யாருடைய எதிர்பார்ப்பு நிறைவேற போகிறதென இன்றிரவு  தெரிந்துவிடும்.

உலகக்கோப்பை போட்டிகள் உள்பட, இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இதுவரை மொத்தம் 131 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் 73 போட்டிகளில் பாகிஸ்தானும், 54 ஆட்டங்களில் இந்தியாவும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP