2-ஆவது ஒருநாள் போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெறுகிறது.
 | 

2-ஆவது ஒருநாள் போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது இந்தியா. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டிபோர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியில், முதல் ஒருநாள் போட்டியில் இடம்பெற்ற வீரர்களே, இன்றைய போட்டியில் விளையாடுவார்கள் என தெரிகிறது.

டி20 தொடரை வென்றதை போலவே, ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி விளையாடும். ஒரு நாள் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் வெஸ்ட் இண்டீஸ் உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP