25 சிக்ஸர்...  397 ரன்கள் ...யப்பா... ஒரு மேட்சுல இவ்வளவு ரெக்கார்டா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவித்தது. அத்துடன் இந்தப் போட்டியில், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.
 | 

25 சிக்ஸர்...  397 ரன்கள் ...யப்பா... ஒரு மேட்சுல இவ்வளவு ரெக்கார்டா?

 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 397 ரன்கள் குவித்தது. அத்துடன் இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.

குறிப்பாக, இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன், இன்றைய போட்டியில் 148 ரன்களை குவித்தார்.  இதில், 17 சிக்ஸர்களும் அடங்கும். இதுவே, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு வீரர் அடித்துள்ள அதிகபட்ச சிக்ஸர்களாகும்.

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் அடித்த 16 சிக்ஸர்கள் தான் இதுநாள்வரை சாதனையாக இருந்தது வந்தது.

அத்துடன்,  மோர்கன்  உள்ளிட்ட இங்கிலாந்து அணி வீரர்கள் இன்று மொத்தம் 25 சிக்ஸர்களை விளாசியுள்ளனர். இதுவே, உலகக்கோப்பை போட்டிகள் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஒரு அணி சார்பில் அடிக்கப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான சிக்ஸர்களாகும்.

25 சிக்ஸர்...  397 ரன்கள் ...யப்பா... ஒரு மேட்சுல இவ்வளவு ரெக்கார்டா?

இதேபோன்று, இங்கிலாந்து அணி இன்று குவித்துள்ள 397 ரன்களே, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அந்த அணி எடுத்துள்ள அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன், நடப்பு உலகக்கோப்பை போட்டியிலேயே, வங்கதேச அணிக்கு எதிராக இங்கிலாந்து 386 ரன்களை குவித்தது.

மேலும்,  இன்றைய ஆட்டத்தில் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் மோர்கன், மொத்தம் 189 ரன்களை சேர்த்தனர். இது, உலகக்கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணி வீரர்கள் இருவர் ஜோடியாக (பாட்னர்ஷிப்) எடுத்துள்ள அதிகபட்ச ரன்களாகும்.

57 பந்துகளில் 100 ரன்களை (சதம்) எடுத்ததன் மூலம், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர்கள் வரிசையில் நான்காவது இடத்தை மோர்கன் பிடித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP