சகல நோய்க்கும் நிவாரணம் தரும் யோகா!

Health Benefits of Yoga
 | 

சகல நோய்க்கும் நிவாரணம் தரும் யோகா!

யோகாசனம் நம்முடைய வாழ்வில் நோய்களை வராமல் தடுக்கும். இன்றைக்கு மனிதன் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் முதல் இதய நோய் வரையிலான ஆறு மிக முக்கியமான பாதிப்புகளை யோகா எப்படி சரி செய்கிறது என்று பார்ப்போம்.

மன அழுத்தம்

பொதுவாக உடல் அழுத்தம், மன அழுத்தம் என இரண்டு அழுத்தங்கள் இருக்கின்றன. காலையில்  எழும்போது உடல் புத்துணர்வோடு
உடல்நலக்குறைவு தரும் மன அழுத்தத்தைவிட வாழ்க்கைமுறைகள், உறவுகள் , நட்புகளால்  ஏற்படும் மன அழுத்தம் அளவில்லாமல் உள்ளது. அதிக மன அழுத்தம் நம்மை முற்றிலும் மிதித்து கொல்லும் பேராபத்து உள்ளது.

பிராணாயாமமும் , தியானமும் மன அழுத்தத்தை விரட்டும் ஆற்றல் படைத்தது. மூச்சு பயிற்சி எடுத்தால் மன அழுத்தம் தானாகவே குறைந்து, மனம் அமைதியடையும். செய்யும் வேலைகளில் கவனமும் இருக்கும். பல எண்ணங்கள் மனதுக்குள் அலைமோதுவதால்தான் மன அழுத்தம் வருகிறது.. மூச்சுப்பயிற்சி செய்யச்செய்ய, நம்மை தொந்தரவு செய்யும் தேவையற்ற எண்ணங்கள் விலக ஆரம்பிக்கும்.

ரத்தக்கொதிப்பை தடுக்கும் மூச்சுப்பயிற்சி 

நமது இதயம் எப்படி இளமையாக உள்ளது? இதய ஆரோக்கியத்தை அளக்கும் கருவி என்று கோட இரத்த அழுத்தத்தை சொல்ல முடியும்.தியானம், பிராணாயாமத்தின் ஒரு பகுதியான நாடிசுத்தி ஆகிய பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலையும், மனதையும்  சீராக்கி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும்.

முதுகுவலிக்கு பை பை சொல்லும் மார்ஜாரி ஆசனம்

கழுத்திலிருந்து கீழ்பாகம் வரை நம் உடலின் எல்லா பகுதிகளையும் தாங்கிக் கொண்டிருக்கும்  முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இறுக்கமாக இருக்கும்போதுதான் முதுகுவலி வருகிறது. இரு சக்கர வாகனத்தை அதிகம் பயன்படுத்துவது, கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் வேலைப் பார்ப்பது ஆகியவை முதுகு வலிக்கு காரணங்களாக அமைகிறது. மார்ஜாரி ஆசனத்தின் மூலம் முதுகெலும்பின் இறுக்கத்தைக் குறைத்து, முதுகுவலியை விரட்ட முடியும். 

சர்க்கரை நோய்க்கும் தீர்வு  உண்டு !

இந்தியாவில் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் தமிழ்நாடும் இடம் பெறத்தொடங்கி உள்ளது. வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் சரியாக செயல்படாதபோது இன்சுலின் சுரப்பு குறைந்து, சர்க்கரை நோய் உருவாகிறது. யோகாசனத்தின் மூலம் கணையத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைத்து இன்சுலின் சுரப்பை மீண்டும் இயல்புக்குக் கொண்டு வர முடியும். பஸ்சிமோத்தாசனம், தனுராசனம், சர்வாங்காசனம், ஹாலாசனம் ஆகிய பயிற்சி களை தொடர்ந்து மேற்கொண்டால் நீரிழிவிலிருந்து விலகி வாழலாம்.

சிறுநீரகம் காக்கும்  தனுராசனம்

சர்க்கரை நோய் உட்பட பல நோய்களின் காரணமாக சிறுநீரகக் கோளாறு ஏற்படும். உணவில் உப்பைக் குறைப்பது, தண்ணீர் நிறைய குடிப்பது போன்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில எளிய மாற்றங்களுடன் சலபாசனம், தனுராசனம் போன்ற ஆசனங்களை செய்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். உட்டியாணா என்ற வயிற்றுக்காக செய்யப்படும் பயிற்சியும் அரைமணிநேரம் தவறாமல் செய்து வந்தால் நல்ல பலனை உணரலாம்.

இதயத்துக்கு  இதம் தரும் சர்வாங்காசனம்!

விலங்குகளுக்கு இதய நோய் வருவதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். 4 கால்களில் நிற்பதால் முதுகு மேலேயும் அதற்குக் கீழே இதயமும் இருக்கிறது. ஆனால், நாம் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதால் கீழிருந்து அதிக அழுத்தத்துடன் ரத்தம் மேலே ஏறுகிறது. இதனால் இதயத்துக்கு வேலைப்பளு அதிகமாகிறது. இதுவே மனிதர்களுக்கு இதய நோய் வர காரணங்களில் ஒன்று என்றும் சொல்கிறார்கள். முதுகுத்தண்டு மேலேயும், இதயம் கீழேயும் வரும் சர்வாங்காசனம், விபரீத கரணி ஆகிய பயிற்சிகள் இதய நோய்களை நம் அருகில் நெருங்கவிடாமல் தடுக்கும்.

நமக்கு பிடித்த நடிக - நடிகையர்  ,நமது நல்வாழ்விற்கும் யோகக்கலை மூலம் வழிகாட்டுகிறார்கள். வெறும் ஆரவார ரசிகர்களாக இல்லாமல் ஆரோக்கியமான ரசிகர்களாவோம். யோகம் பழகுவோம்.

# சர்வதேச யோகா தினம் ஜூன் 21

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP