சிரிப்பு யோகா முக்கியம் மக்களே ! - சிரிப்பானந்தா

'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்' என்ற பழமொழியை நாம் காலம் காலமாக கேட்டு வந்தாலும், நாளுக்கு நாள் நம் சிரிப்பு குறைந்துக் கொண்டே தான் வருகிறது.
 | 

சிரிப்பு யோகா முக்கியம் மக்களே ! - சிரிப்பானந்தா

'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்' என்ற பழமொழியை நாம் காலம் காலமாக கேட்டு வந்தாலும், நாளுக்கு நாள் நம் சிரிப்பு குறைந்துக் கொண்டே தான் வருகிறது. மாமியார் - மருமகள் பிரச்னை, கணவன் - மனைவி பிரச்னை, வேலைப்பளு, பல விதமான மன அழுத்தம் என பெரும்பாலான பிரச்னைகளைத் தீர்க்கும் ஓர் அருமருந்து தான் சிரிப்பு! 

ஆனால் எப்படி சிரிப்பது? ஜோக்ஸ் படித்து சிரிக்கலாம் என்றால் முன்பு போல தரமான ஜோக்ஸ் இப்போது அரிதாகி விட்டது. சரி படங்களில் வரும் காமெடியைப் பார்த்து சிரிக்கலாம் என்றால், அதுவும் வற்றி விட்டது. அப்படி என்றால் என்ன தான் செய்வது என்கிறீர்களா? அதற்காகத்தான் இருக்கிறார் சிரிப்பானந்தா! சிரிப்பு யோகா எனும் பயிற்சியை பலருக்கும் சொல்லிக் கொடுத்து வருபவர். 

"சிரிங்க, மனசு விட்டு, வாய் விட்டு தினமும் 15 நிமிடம் சிரித்தால் பல நோய்களும் பிரச்னைகளும் உங்களை விட்டு போவதோடு, உங்களின் இளமையும் கூடும்" எனப் பேசத் தொடங்கினார் அவர்.    
"எனது பெயர் சம்பத். தஞ்சையில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தப் போது வேளைப் பளுவின் காரணமாக எனது 22 வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளானேன். அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி சிரிப்பு பயிற்சிக்கு சென்றேன். 

சிரிப்பு யோகா முக்கியம் மக்களே ! - சிரிப்பானந்தா

அதில் ஏற்பட்ட மாற்றங்களை கண்கூடாகப் பார்த்ததால், தகுந்த குருவிடம் முறையாக பயின்று பிறகு நானே ஒரு ஹ்யூமர் கிளப்பைத் தொடங்கி கடந்த 15 வருடங்களாக நடத்தி வருகிறேன். சிரிப்பு யோகாவிற்கும், ஹ்யூமர் கிளப்பிற்கும் நிறைய வித்தியாசமுள்ளது. நாங்கள் இந்த இரண்டையுமே சொல்லித் தருகிறோம். இதுவரை 3000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். 7 லட்சம் மக்களுக்கு இது வரை இந்த சிரிப்பு யோகாவை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். 

பள்ளி, கல்லூரி, காவல் துறை அதிகாரிகள், சிறை கைதிகள் (ஆண் பெண்), மன நலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், மருத்துவமனைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பலதரப் பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கும் இதனைக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அதோடு பீச், பார்க் ஆகிய இடங்களிலும், அம்பத்தூரில் இருக்கும் என ஹ்யூமர் கிளப்பிலும் தொடர்ந்து பயிற்றுவிக்கிறேன். 
சமீபத்தில், சீனப் பெருஞ் சுவரில்  நின்று இதனைக் கற்றுக் கொடுத்தேன். இந்தியாவின் தாஜ்மஹால், இத்தாலியின் கொலோசியம் கட்டிடம், பைசா சாய் கோபுரம் என 4 உலக அதிசயங்களில் இந்த சிரிப்பு யோகாவை மக்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். சீனப் பெருஞ்சுவரில் செய்துக் கொண்டிருந்தப் போது, நான் அழைத்துச் சென்றவர்களோடு, 'வோர்ல்ட் டூர்' வந்தவர்களும் கலந்துக் கொண்டார்கள். 
சிட்னியில் 6 கி.மீ. படகில் சென்று நடுக் கடலில் நின்றுக் கொண்டு, சிரிப்பு யோகா செய்தது, புதுமையான அனுபவமாக இருந்தது. தவிர, சிங்கப்பூர், ஹாங்காங், துருக்கி, இத்தாலி, சீனா, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளுக்கும் அடிக்கடி சென்று இதனை சொல்லிக் கொடுக்கிறேன். 

சிரிப்பு யோகா முக்கியம் மக்களே ! - சிரிப்பானந்தா

மருத்துவமனைகளில் நான் நிறைய முறை இதை செய்திருந்தாலும், ஐ.சி.யூ-வுக்கு வெளியில் மனது படபடக்க காத்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினரிடம் இதை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மிகுந்த நாட்களாய் இருந்தது. உள்ளே மிகவும் சீரியஸான கண்டீஷனில் தனது உறவினர் இருக்கும் போது, வெளியில் இருப்பவர்களை நம்மால் 'கூல்' பண்ண முடியுமா என்ற ட்வுட் இருந்தது. அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதைப் பற்றி அறிந்துக் கொள்ளவும் ரொம்ப ஆவலாக இருந்தது. அதையும் சமீபத்தில் காவேரி மருத்துவமனையில் செய்தோம். ஒரு 50 பேருக்கு இதனை சொல்லிக் கொடுத்தேன். அதில் ஒருவர், 'உள்ள என்ன ஆகுமோன்னு கவலைப் பட்டுட்டு இருந்தேன், இந்த சிரிப்பு யோகா பண்ணி முடிச்சதும், என்ன ஆனாலும் கவலை இல்ல, நாம செய்ய வேண்டிய முழு முயற்சியும் செஞ்சிடனும். நம்ம டென்ஷன் ஆனா அது பாதிக்கப் பட்டுருக்கவங்களுக்கு தான் இன்னும் பிரஸர், அதனால அவங்க முன்னாடியும் அப்படி இருக்கக் கூடாதுன்னு தெரிஞ்சிக் கிட்டேன். எந்த சீரியஸான விஷயம் நடந்தாலும் அதை 'கூலாக' ஹேண்டில் செய்வதற்கான தன்மையும், பக்குவமும் கிடைச்சிருக்கு' என்றார். 

யோகாவைப் பொறுத்தவரைக்கும் எல்லாம் சீரியஸாக இருக்கும். ஆனால் சிரிப்பு யோகா எல்லாத்தையும் எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் எடுத்துக் கொண்டு செய்யக் கூடியது. யோகாவில் இப்படித்தான் திரும்ப வேண்டும், இங்கு தான் பார்க்க வேண்டும் என சில வரைமுறைகள் உள்ளன. ஆனால் சிரிப்பு யோகாவில் அப்படியான கட்டுப் பாடுகள் எதுவும் இல்லை. 

சிரிப்பு யோகா முக்கியம் மக்களே ! - சிரிப்பானந்தா

யோகாவை சின்னக் குழந்தைக் கூட பெரியவர் போல் செய்ய வேண்டும். சிரிப்பு யோகாவில் பெரியவர் கூட குழந்தை மனப்பான்மையில் செய்ய முடியும். அதனால் மனதிற்கு முழுமையான நெகிழ்ச்சித் தன்மை கிடைக்கிறது. 

சிரிப்பு நமது அடிப்படை அமைப்பையே மாற்றுவதால், பல நோய்களை குணப் படுத்துகிறது. முக்கியமாக இதயத்தில் அடைக்கும் கொழுப்பை நீக்குகிறது. மூச்சுக் குழாயை சுத்தப் படுத்துவதால், ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. ரத்த ஒட்டத்தை சீராக்குகிறது. ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. சிரிக்கும் போது எனர்ஜி எல்லா இடங்களுக்கும் பரவுவதால், நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. மூளையின் செயல் திறனை அதிகரித்து நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. 
 
சிரிக்கும் போது 'எண்டார்ஃபின்' எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது பொதுவாக ஆழ்ந்த தியானத்தில் தான் சுரக்கும். உடலைக் கட்டுப் படுத்தும் தசைகள் அனைத்தும் முகத்தோடு கனெக்ட் ஆகியுள்ளதால்,  சிரிக்கும் போது ஒவ்வொரு தசையும் மலர்ச்சியடைந்து, முகம் பொலிவாகிறது. 

பல மருத்துவ குணங்கள் இந்த சிரிப்பு யோகாவுக்கு இருபதால் தான், மருத்துவர்களே இதனை பரிந்துரைக்கிறார்கள். தவிர, இதனை கண்டுப் பிடித்தவரே மதன் கட்டாரியா எனும் மருத்துவர் தான். அல்லோபதி மருத்துவர்கள், மாற்று மருத்துவர்கள் என அனைவருமே இதனை ஏற்றுக் கொள்கிறார்கள். முக்கியமாக இதற்கு மொழி தேவையில்லை". 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP