‘சர்வதேச யோகா தினம்’ – மன,உடல் நலம் காக்கும் யோகா

வேதம் தோன்றிய காலம் முதலே யோகக்கலை இருந்து வருகிறது. மிக பழமையான நம்முடைய யோகக்கலை, உடல், மனம், அறிவு, ஆன்மிகம் ஆகிய அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வரும் ஒரு அற்புதக்கலை.
 | 

‘சர்வதேச யோகா தினம்’ – மன,உடல் நலம் காக்கும் யோகா

வேதம் தோன்றிய காலம் முதலே யோகக்கலை இருந்து வருகிறது. மிக பழமையான நம்முடைய யோகக்கலை, உடல், மனம், அறிவு, ஆன்மிகம் ஆகிய அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வரும் ஒரு அற்புதக்கலை. ஜாதி மத பேதம் இன்றி அனைவர்க்கும் ஒரே மாதிரியான பலன்களை அளிக்க வல்லது.

பழைமை வாய்ந்த இந்த யோகக்கலையைக் போற்றும் விதமாக,பிரதமர்  மோடி  முயற்சியால் ,2014ம் ஆண்டு ஐ.நா. சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இதற்கு 177 நாடுகள் ஆதரவு அளித்தன. இந்த ஆண்டு, 'சமுக நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான  யோகா (Yoga for harmony and Peace  )' என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது.

'சர்வதேச யோகா தினம்' கடைப்பிடிக்க ஆரம்பித்ததில் இருந்து பாமர மக்களையும் சென்று சேர்ந்துள்ளது யோகக்கலை. இன்று பள்ளிகளில் யோகா வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கார்பரேட் அலுவலகங்களிலும் பணியாளர்களுக்கு எளிமையான யோகாசன பயிற்சி முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்பு எங்கேயோ ஒன்றிரண்டு நபர்களுக்கு மட்டுமே தெரிந்த யோகா என்ற பெயர் இன்று அனைவரும் உச்சரிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மகரிஷி பதஞ்சலி இந்தக் கலையை மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் மாற்றி அதன் சாரத்தையும், அதன் மூலம் அவர் பெற்ற ஞானத்தையும் தொகுத்து வழங்கியுள்ளார். உலகில் உள்ள அனைத்து யோகிகளும் பதஞ்சலி மகரிஷிக்கு வாழ்நாள் முழுவதும் கடன்பட்டுள்ளார்கள்.

 நமது ஆன்மாவிற்கும் யோகாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நமது உடல் மற்றும் மனதை ஒருங்கிணைப்பதன் மூலம் யோகா, ஜீவாத்மா எனப்படும் நம்மை இந்த அகிலம்  முழுவதும் பரவியிருக்கும் பேராற்றலான பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கச் செய்கிறது.

சமஸ்கிருத மொழியில் ‘யுஜ்’ என்ற வார்த்தையிலிருந்து வந்ததே ‘யோகம்’ .இதன் பொருள் இணைதல், அல்லது  ஒன்றுபடுதல்  ஆகும்.  உடல், உள்ளம், உணர்ச்சிகள் ஆகியவை இணைந்து செயல்படத்தேவையான வழிமுறைகளை கொண்டதே யோகப் பயிற்சி. 

 
‘சர்வதேச யோகா தினம்’ – மன,உடல் நலம் காக்கும் யோகா

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவது மாமே.
-திருமந்திரம். (552)


இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹரம், தாராணை, தியானம் மற்றும் பதஞ்சலி என்னும் எட்டு அங்கங்களைக் கொண்டது யோகக் கலை. 
யாமா (விதிகள் / வரையறைகள்)
நிர்யாமா (தனிமனித ஒழுக்கம்)
ஆசனா (யோகா செய்யும் முறைகள்)
ப்ராணாயமா (மூச்சுப்பயிற்சி)
ப்ரத்யஹாரா (விடுபடுதல்)
தாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)
தியானா (தியானம்)
சாமாதி (தீர்வு)

அஷ்டாங்க யோகம்
பதஞ்சலி யோகம் என்றும் அஷ்டாங்க யோகம் என்றும் அழைக்கப்படும் யோக முறைகள் பதஞ்சலி மகரிஷியால்  உருவாக்கப்பட்டவையே.
எட்டு அங்கங்களை கொண்டஅஷ்டாங்க யோகத்தில் முதலாவது

யமம் - அஹிம்சை, சத்தியம், திருடாமல் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், ப்ரம்மசர்யம், போகப்பொருள்களை தவிர்த்த நிலை ஆகியவையால் கடைப்பிடிக்கப்பட்ட  வாழ்வே "யமா" அல்லது யமம் எனப்படும்.
 

நியமம்
தூய்மையாக இருத்தல், வாழ்வில் எது நடந்தாலும், ஆர்ப்பரிக்காமல் ,அமைதியாய் நடுநிலையாய் இருத்தல்,
தவம்,  கற்றல், தான் கற்ற எல்லாவற்றையும் ஈஸ்வரனுக்கு அர்ப்பணித்து தன் கடமைகளை செய்தல் ஆகியவை நியமத்தில் அடங்கும்.

ஆசனம்

அசைவின்றி சுகமான வகையில் தன்னை கஷ்டப்படுத்திக்கொள்ளாமல் அமரவேண்டும்.

ப்ராணாயாமம்
ஆசனம் அமைந்தபிறகு, ப்ராணாயாமம் என்ற முறையில் சுவாசத்தை கட்டுப்படுத்துவது.

ப்ரத்யாஹாரம்

புலன்களை அடக்கி ,மனதை  ஒருநிலைபடுத்தும்  நிலை ப்ரத்யாஹாரம் எனப்படும்.

தாரணா
ஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனதை லயிக்கவிடுவது, இதற்கு இடையில் வரும் இடையூறுகளை விலக்கி ஏகாக்ர சிந்தை என்பதைப்போல் ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மனதை நிலை நிறுத்தி வைத்தல் தாரணா எனப்படும்.

த்யானம்

தாரணா நிலையில் மனதை ஒருமைப்படுத்தி, பக்தியுடன் இடைவிடாமல் இறைவன் பால்  தொடர்ந்து மனம் லயிப்பதே த்யானம் எனப்படும்.
சமாதி
அஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை, சமாதி எனப்படும்.

எதை நினைத்து மனதை ஒருநிலைப் படுத்தி, த்யான நிலைகளில் மனதில் லயிக்க விடுகிறோமோ அதாகவே ஆகி இரண்டர கலந்து ஒன்றாகிவிடுதலே சமாதி எனப்படும் எட்டவது நிலையாகும்.

 ‘சர்வதேச யோகா தினம்’ – மன,உடல் நலம் காக்கும் யோகா

யோகா பயிற்சிகளின் போது , நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை, அனைத்து செல்களும் பெறுவதால்,உள்ளுறுப்புகள் நன்கு இயங்க உதவி செய்கிறது.

இன்றைய நவீன காலத்திற்கேற்ப புது புது வியாதிகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால்  உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் சீராகி, உடலின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.நமது உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.

நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.பிராணாயாமம்  எனப்படும் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை நிலைப்படுத்தி,  அமைதியான எண்ணங்களை நிலைபெறச் செய்கிறது.

யோகாவை சரியான முறையில் எப்படி செய்ய வேண்டும் என்று அதற்குரிய யோகா குரு அல்லது பயிற்சியாளரிடம் கற்றுக்கொண்ட பிறகு செய்வதால் அதனுடைய முழுமையான பலனை நாம் பெறலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP