ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி காட்டும் அனுஷ்கா, அமலா பால்

அனுஷ்கா, தமன்னா, ஷில்பா ஷெட்டி, அமலா பால் , சிவகுமார், சூர்யா,விவேக் இந்த திரையுலக நட்சத்திரங்களுக்கு உள்ள ஒற்றுமை என்ன என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
 | 

ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி காட்டும் அனுஷ்கா, அமலா பால்

அனுஷ்கா, தமன்னா, ஷில்பா ஷெட்டி, அமலா பால் , சிவகுமார், சூர்யா,விவேக் இந்த திரையுலக நட்சத்திரங்களுக்கு உள்ள ஒற்றுமை என்ன என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இவர்கள் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைப்பது யோகா. அதுவும் அனுஷ்கா ஷெட்டி சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்ததன் பின்னனியில் யோகா உள்ளது. அனுஷ்கா கல்லூரியில் படித்தபோது பரத் தாக்கூர் என்ற யோகா குருவிடம் பயிற்சிபெற்று அவரது பயிற்சிக் கூடத்தில் யோகா ஆசிரியையாகவும் பணியாற்றினார். அங்கே யோகா பயிற்சிக்காக வந்த தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத், தனது படத்துக்கு இரண்டாவது கதாநாயகி தேடிக்கொண்டிருப்பதை பரத் தாக்கூரிடம் கூறினார். அப்போது பரத் தாக்கூர் அனுஷ்காவைப் பரிந்துரைக்க ,  பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் 2005-ல் நாகார்ஜூன் ஜோடியாக ‘சூப்பர்’ என்ற தெலுங்குப் படத்தின் வழியாகத் திரைக்கு அறிமுகமானார் என்பது வரலாறு!  

யோகாவில் தனது கணவருடன் இணைந்து ஏகத்துக்கும் சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் இன்னொரு நட்சத்திரம் பிபாஷா பாஷூ. உங்களை விட ஒரு படி உயரம் நான் என்கிறார் அமலா பால். கொச்சியில் எம்.ஆர் யோகா என பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார் அமலா பால்.

இளமையாகவும், எடை கூடாமல் இருக்கவும் யோகா தனக்கு உதவி செய்வதாக சிலாகிக்கிறார் பிரபல பாலிவுட் நட்சத்திரம் ஷில்பா ஷெட்டி. யோகாவைப் பற்றி இவர் ஒரு புத்தகமே வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

என்றும் இளமையை காத்து தருகிறது யோகக்கலை என்கிறார் நடிகர் சிவகுமார். தந்தை சிவகுமாரைப் போலவே தானும் யோகக் கலையில் ஈடுபாடு கொண்டிருப்பதாக சொல்கிறார் நடிகர் சூர்யா. இவர்களைப் போல யோகா, தியானம் என்று வாழ்க்கைக்கு வழிகாட்டும் முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் நடிகர் விவேக்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP