காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் நார்வேயுடன் காங்கிரஸ் ஒத்துழைப்பா?

ஒஸ்லோ அமைதி மற்றும் மனித உரிமை மையத்தின் தலைவராக தற்போது உள்ள போண்டேவிக், ஹூரியத் தலைவர் சயீது அலி ஷாஹ் கிலானி மற்றும் மிர்வேயிஸ் ஓமர் ஃபரூக் இவர்களது சந்திப்பு கிலானியின் ஹைதர்போரா வீட்டில் நடந்தது.
 | 

காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் நார்வேயுடன் காங்கிரஸ் ஒத்துழைப்பா?

முன்னாள் நார்வே நாட்டு பிரதமர் க்ஜல் மக்னே போண்டேவிக் சமீபத்தில் காஷ்மீர் வந்து அங்குள்ள பிரிவினைவாத தலைவர்களை சந்தித்துள்ளார். கர்தார்பூரில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் சாலை சந்திப்பு ஏற்படுத்த இரு நாடுகளும் சம்மதித்து அதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்ட சில தினங்களில் பிரிவினைவாதிகளுடனான இவரது சந்திப்பு நடந்துள்ளது. 

நார்வே நாட்டு பிரதமராக இரு முறை பதவி வகித்தவர் க்ஜல் மக்னே போண்டேவிக். 1997 - 2000 மற்றும் 2001 - 2005 காலகட்டங்களில் அந்நாட்டு பிரதமாரக இருந்த இவர் இலங்கை அரசு மற்றும் விடுதலை புலிகள் இயக்கத்தின் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த முனைந்தார். மேலும் கூற, இவர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட நபர்களுள் ஒருவர்.

தற்போது ஒஸ்லோ அமைதி மற்றும் மனித உரிமை மையத்தின் தலைவராக தற்போது உள்ள போண்டேவிக், ஹூரியத் தலைவர் சயீது அலி ஷாஹ் கிலானி மற்றும் மிர்வேயிஸ் ஓமர் ஃபரூக் இவர்களது சந்திப்பு கிலானியின் ஹைதர்போரா வீட்டில் நடந்தது. 

காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் நார்வேயுடன் காங்கிரஸ் ஒத்துழைப்பா?

இது குறித்து தி சண்டே எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு மிர்வேயிஸ் ஓமர் கூறுகையில், '' அவர் எங்களை சந்திக்க வருகிறார் என்கிற செய்தி கேட்டு ஆச்சரியமடைந்தோம். ஏனெனில் சமீப காலமாக எந்த வெளிநாட்டு பிரதிநிதிகளும் எங்களை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.  டெல்லியின் கெடுபிடியால் யாரும் எங்களை சந்திக்க வருவதும் இல்லை. அவர் இங்கு வருவதற்கு டெல்லி அமைச்சகத்தின் அனுமதியால் மட்டுமே நடக்கும் என்பதும் தெரியும்.  அவரை ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கரின் பிரதிநிதி தான் அழைத்து வந்தார். 

இங்கு இருக்கும் கள நிலவரம் குறித்து தெரிந்துகொள்ளவே இங்கு வந்ததாக போண்டேவிக் கூறினார். நாங்கள் எங்களது நிலையைக் கூறினோம். அதன் பலன் என்னவாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே நல்ல விஷயங்கள் நடக்க ஒரு முயற்சியாகவும் இருக்கலாம் என்று நம்புகிறோம். அதுவும் கர்தார்பூர் பாதை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்ட இந்த நேரத்தில் வந்திருப்பதும் அது தொடர்புடையதாக இருக்கும் என்று தான் நினைக்க தோன்றுகிறது.'' என்றார் 

காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் நார்வேயுடன் காங்கிரஸ் ஒத்துழைப்பா?

இந்தியா - பாகிஸ்தான் உறவு சிறிது காலமாக இறுக்கமாக இருக்கிறது. அதனை மீண்டும் பழைய நிலைக்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக இந்த விஷயம் அப்படியே இருக்கிறது. வன்முறைதான் இங்கு பிரச்சினை. இருத் தரப்பு காஷ்மீர் எதிர்பார்ப்புகளையும் அறிந்து முடிவு எட்டப்பட வேண்டும் என்று போண்டேவிக் கூறியதாக மிர்வேயிஸ் ஓமர் தெரிவித்தார். இந்த சந்திப்பை அடுத்து தான் டெல்லியில் அதிகாரிகளை சந்தித்து விட்டு பாகிஸ்தான் சென்று அங்கு ஆசாத் காஷ்மீரையும் சந்திக்க உள்ளதாக தன்னிடம் போண்டேவிக் தெரிவித்ததாக கூறினார். 

நாங்களும் இங்கு நடக்கும் படுகொலைகள் குறித்த எங்களது கவலைகளை தெரிவித்தோம். டெல்லி நடத்தும் ராணுவ நடவடிக்கைகளால் நாங்கள் கொதிப்படைந்து உள்ளோம். ஆனால் யாரும் எங்களை கவனிப்பது இல்லை. எங்களது தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன என்று மிர்வேயிஸ் போண்டேவிக்கிடம் கூறியுள்ளார். 

எந்த அரசு அதிகாரிகளையும் சந்திக்காத போண்டேவிக்!

ஆனால் மிர்வேயிஸ் பத்திரிக்கை செய்திக்கு குறிப்பிட்டது போல, போண்டேவிக் டெலி சென்று எந்த மத்திய அரசுக்கு தொடர்புடைய அதிகாரிகளையும் சந்திக்கவில்லை. மாறாக அவர் அரசுக்கு எதிரானவர்களை  மட்டுமே சந்தித்து பாகிஸ்தான் சென்றுள்ளார். இதனை காஷ்மீர் காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது. 

இந்தியா - காஷ்மீர் பிரச்னையில் நார்வேயின் தலையீடு ஏன்?

முற்றிலும் நமது தேசத்துக்கு தொடர்பே இல்லாத ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் ஸ்கேண்டிநேவிய நாடுகள் தான் டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன். இந்த நாடுகள் மனித உரிமைகள் என்ற பெயரில் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதற்கு இலங்கை பிரச்னையும் ஒரு முன்னுதாரணம். தற்போது அதே போல, காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே பேச விரும்பும் நார்வே, ஆளும் அரசை தவிர்த்து பிரிவினைவாத தலைவர்களை மட்டும் கவனித்து பேச வேண்டிய அவசியம் என்ன என்பது கேள்விக்குறியான விஷயமாக உள்ளது. 

காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் நார்வேயுடன் காங்கிரஸ் ஒத்துழைப்பா?

மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கடந்த ஆகஸ்டு மாதம் நார்வே சென்றிருந்தார். வழக்கம் போல அவர் அங்கு செல்வது குறித்து கேள்விகள் எழுந்தன. ஆனால் அதற்கும் அவர் வழக்கம்போல் பதிலளிக்கவில்லை. 

ராகுலின் நார்வே நாட்டுத் தொடர்பு

வேறுமென நார்வே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நார்வே செல்வதாக செய்திகள் வந்தன. இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்ட ராகுல், ''நார்வே வெளியுறவுத்துறையின் அழைப்பின் பேரில் சில நாட்கள் பயணமாக ஆஸ்லோ செல்கிறேன். அங்குள்ள அரசியல், வர்த்தக தலைவர்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களுடன் நடத்தும் சந்திப்புகளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். பின் ஒஸ்லோவில் ஓரிரு தினங்கள் இருப்பேன்'' என்று குறிப்பிட்டிருந்தார். 

அப்போது பிஹார் தலைநகர் பாட்னாவில் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் சார்பில் பா.ஜனதாவுக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது.  பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நார்வே செல்வதில் தான் முக்கியத்துவம் செலுத்தினார். 

நார்வே நாட்டின் அத்துமீறல் தனத்தையும் காங்கிரஸ் தலைவரின் அந்நாட்டு தொடர்புகளும் அவர்களது நோக்கம் குறித்த வலுவான சந்தேகத்தை எழுப்புவதாகவே உள்ளது!

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP