இரும்புக் கரங்களில் வலுபெற்ற அகண்ட பாரதத்தின் கதை 

இந்தியாவில் நிலவும் சார்பற்ற ஒற்றுமை சர்தார் வல்லபாய் படேலின் கைவண்ணம். ஜனநாயகம் மற்றும் இந்திய அரசின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியாவர் படேல். ஆனால் அவர் நேருவை போல வசீகரமான தோற்றம் கொண்டிருக்கவில்லை.
 | 

இரும்புக் கரங்களில் வலுபெற்ற அகண்ட பாரதத்தின் கதை 

இந்தியாவில் நிலவும் சார்பற்ற ஒற்றுமை சர்தார் வல்லபாய் படேலின் கைவண்ணம். ஆகையால் தான் அவர் அனைத்து மக்கள் நலன்களையும் கருத்தில் கொண்டு ஜனநாயகம் மற்றும் இந்திய அரசின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினார். ஆனால் அவர் நேருவை போல வசீகரமான தோற்றம் கொண்டிருக்கவில்லை. 

1947-ம் ஆண்டு ஜூன் மாதம் மாகாணங்கள் இணைப்புத் துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையின் முக்கிய நோக்கம் பரப்பளவு, மக்கள்தொகை, புவி அமைப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளில் மிகவும் வேறுபட்டிருந்த நாட்டிலுள்ள 550-க்கும் அதிகமான சுதேச மாகாணங்களோடு பேச்சுகள் நடத்தி, அதற்கு உத்வேகம் அளித்து, மாகாணங்களோடு இந்தியாவின் உறவை பராமரிப்பதாகும்.

பிரிட்டிஷ் ஆட்சியில் வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.

இரும்புக் கரங்களில் வலுபெற்ற அகண்ட பாரதத்தின் கதை 

அப்போது, இங்கு மாநிலங்களின் பிரச்னைகள் மிகவும் சிரமம் வாய்ந்தது, எனவே அதனை தீர்க்க உன்னால் தான் முடியும் என மகாத்மா காந்தி படேலிடம் தெரிவித்தார். பிரிட்டஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது 550 குறுநில சமஸ்தானங்களை இருந்த மாநிலங்களை ஒருங்கிணைத்ததன் மூலம் பெருமை பெற்றார்.  அதற்காக படேல் பாடுபட்டது சாதாரணமானது அல்ல, நாடெங்கும் 24 மணி நேரமும் அயராது நடந்து அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஓர் ஒன்றியமாக இருத்தல் வேண்டும். இந்திய ஒன்றியத்திற்குள் புதிய மாநிலங்களை சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது. இதில் தாங்களே மதிப்புமுக்கு மாநிலம் என்ற நிலை கொள்ள முடியாது என்ற இந்த விதி, காலனி ஆதிக்கத்தை பட்டேல் முடிவுக்கு கொண்டு வந்த பின் அமலானது. 

பிரிட்டன் ஆட்சியின் போது 565 சுதேச அரசுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் ஆயிரம் தாக்கூர், தாலுக்தர், லாண்ட்லோர் மற்றும் ஜிகிர் ஆகியவற்றில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன. 1947 இல், 555 மாநிலங்களில் 48% பகுதியை உள்ளடக்கிய சுதந்திரம் இந்தியா மற்றும் அதன் மக்கள் தொகையில் 28% அமைக்கப்பட்டது. ஆனால் இவை வெறும் கோப்புகளாகவே இருந்தன. அனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வசம் இருந்தன. ஆட்சி முறை அனைத்திலும் அவர்கள் சர்வாதிகாரம் செலுத்தினர். 

பின்னர் இந்திய மாநிலங்கள் மீது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டிருந்த ஆதிக்கம் 1947ஆம் இயற்றப்பட்ட இந்திய சுதந்திர சட்டத்தினை அடுத்து முடிவுக்கு வந்தது. அப்போது ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தங்களது பகுதி பெர்ம்பான்மை மக்களைக் கருத்தில் கொண்டு இந்தியா அல்லது பாகிஸ்தான் அல்லது சுதந்திர மாநிலமாகவும் நிர்வகித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. 

இரும்புக் கரங்களில் வலுபெற்ற அகண்ட பாரதத்தின் கதை 

இந்தியாவில் உருவான இஸ்லாமிய அரசு இயக்கத்துக்கு பிரிவினை தான் சரியான தீர்வு என்று வியூகம் அமைத்த முதல் காங்கிரஸ்காரர் பட்டேல் தான்.   சுதந்திர இந்தியாவின் இராணுவத்துக்கு இணையான இராணுவத்தை எந்த சுதேச அரசுகளும் கொண்டிருக்க முடியாது என்பதை நேரு கவனித்தார். 1947 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நேரு அரசர்களின் புனித உரிமைகளை சுதந்திர இந்தியாவினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்

இதனால் ஜூன் 27 1947 ஆம் ஆண்டு வல்லபாய் படேல் உள்துறை அமைச்சராக பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளையும் சுதேச அரசுகளையும் இந்தியாவுடன் இணைப்பதற்கு பொறுப்பேற்றிருந்தார்.  படேலுக்கும் அவரது செயலாளர் மேனனுக்கு மாநில மன்னர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பணி நியமிக்கப்பட்டது. இதன் மூலம் மாநில மன்னர்கள் வசம் இருந்த வெளியுறவு கொள்கை, பாதுகாப்பு மற்றும் தொடர்பு கொள்கைகள் காங்கிரஸ் அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. 

மன்னர்களின் பற்றுகளை புரிந்து மாநிலங்களை இந்தியாவாக உள்ளடக்கம் செய்ய அவர்களிடம் எடுத்துக் கூற பாடுபட்டவர் படேல். வேறு வழியில்லாத நிலையில் மாநிலங்கள் அரசுடமையாக்கப்படும் என்பதை தெளிவுபடுத்தினார். ஒருமித்த இந்தியாவை மேற்கொள்ள வழிவகுப்பதன் மூலம் மாநில மன்னர்களை ஈர்க்கும் விதமான உடன்பாடுகளை வடிவமைப்பதில் பட்டேலும் மேனனும் ராஜ தந்திரமான முயற்சிகளை மேற்கொண்டனர். இரண்டு முக்கிய ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. அதில் முதலாவது ஸ்டேண்ட்ஸ்டில் உடன்படிக்கை ஆகும். இது ஆங்கிலேயருக்கும் சுதேச அரசுகளுக்கும் இடையில் ஆங்கிலேயர் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் நிர்வாக நடைமுறைகளை இந்தியா பின்தொடரும் என்பதை உறுதிபடுத்துவதற்கான உடன்படிக்கை ஆகும். அதில் இரண்டாவது சேர்வடைவு முறையாவணம் ஆகும். இது சுதேச அரசுப் பகுதிகளைச் சேர்ந்த அரசர்கள் அவரது ஆட்சிப் பகுதியை சுதந்திர இந்தியாவுடன் இணைக்க சம்மதிப்பது மற்றும் குறிப்பிட்ட விசயங்களில் இந்தியா கட்டுப்படுத்துவதற்கு ஏற்றுக்கொள்ள சம்மதிப்பது ஆகியவை அடங்கிய உடன்படிக்கை ஆகும். இணைக்கப்படும் சுதேசப் பகுதியைச் சார்ந்து இதில் அதன் விசயங்கள் மாறுபட்டிருந்தன. 

1947 ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதிக்கும் இடையில் பெருமளவிலான சுதேசப் பகுதிகள் சேர்வடைவு முறையாவணத்தில் கையெழுத்திட்டிருந்தன. எனினும் சிலர் கையெழுத்திடாமல் இருந்தனர். சிலர் காரணமேதுமின்றி சேர்வடைவு முறையாவணத்தில் கெயெழுத்திடாமல் தாமதப்படுத்தி வந்தனர். மத்திய இந்தியாவில் இருந்த சிறிய சுதேசப் பகுதியான பிப்லோடா, 1948 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இணையாமலே இருந்தது.[60] எனினும் பாகிஸ்தானுடன் இணையும் மேலும் ஆதாயமான ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட ஜோத்பூர், பாகிஸ்தானுடன் முன்பே இணைந்துவிட்டிருந்த ஜுனாகார் மற்றும் சுதந்திரமாக யாரையும் சாராத பகுதிகளாகவே நீடிக்க விரும்புவதாக அறிவித்த ஐதராபாத் மற்றும் காஷ்மீர் போன்ற சில எல்லையோரப் பகுதிகளில் பெரிதளவில் சிக்கல்கள் உருவாயின.

சிக்கலான எல்லைகள் 

ஜோத்பூரை ஆண்ட அன்வந்த் சிங், காங்கிரஸ் மீது வெறுப்புணர்ச்சி கொண்டவராக இருந்தார். மேலும் அவருக்கு இந்தியாவில் இணைந்தால் நல்ல எதிர்காலம் இருக்காது என்றோ அல்லது அவர் விரும்பிய வாழ்க்கை கிடைக்காது என்றோ கருதினார். அதனால் ஜெய்சால்மர் பகுதியை ஆண்ட மன்னருடன் இணைந்து பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்த ஜின்னாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஜின்னா, சில பெரிய எல்லையோரப் பகுதிகளை கவர்வதில் முனைப்புடன் இருந்தார். ஆகவே வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் பகுதியளவை இழந்ததற்கு ஈடு செய்யும் வகையில் பிற ராஜபுத்திர பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு முயற்சித்தார். இவர் ஜோத்பூருக்கும் ஜெய்சால்மருக்கும் பாகிஸ்தானுடன் இணைவதற்கான நிபந்தனைகளை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்தார். அதாவது அவர்களுக்கு ஒரு வெற்றுத் தாளைக் கொடுத்து அதில் அவர்களது நிபந்தனைகளை எழுதச் சொல்லி தான் அதில் கையெழுத்திடச் சம்மதித்தார்.

இரும்புக் கரங்களில் வலுபெற்ற அகண்ட பாரதத்தின் கதை 

 ஆனால் இன ரீதியாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் இந்துக்களை வைத்துக்கொண்டு முஸ்லீம்கள் பிராதானமாக இருக்கும் பகுதியில் இருப்பது மிகவும் சிரமமானதாக இருக்கும் என வாதிட்டு அதற்கு ஜெய்சால்மர் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் அன்வந்த் சிங் கையெழுத்திடும் முடிவெடுத்தார். பிகானேர் இராச்சியம் போன்ற எல்லைப்புற இராச்சியங்கள், பாகிஸ்தானுடன் இணைவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் மனப்பாங்குடன் இருந்தனர். இந்துக்கள் அதிகமுள்ள ஒரு பகுதி பாகிஸ்தானுடன் இணைவது என்பது இந்தப் பிரிவினைக்கு அடிப்படையாக அமைந்த இரு நாடுகள் கொள்கைக்கு முரணாக இருக்கும். மேலும் அந்தப் பகுதிகளில் இனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட இது ஏதுவாக்கிவிடும் என மவுண்ட்பேட்டனும் குறிப்பிட்டார். இந்த வாதங்களுக்கு இணங்கிய அன்வந்த் சிங் தயக்கத்துடன் இந்தியாவுடன் இணைவதற்கு சம்மதித்தார்

காஷ்மீர்

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அந்த நேரத்தில் காஷ்மீர் பகுதியை ஹரி சிங் மகாராஜா ஆண்டு வந்தார். அவர் இந்துவாக இருந்த போதும் அந்தப் பகுதிகளில் பெருமளவில் முஸ்லீம் மக்களே இருந்தனர். இந்தியா அல்லது பாகிஸ்தான் இரண்டுடன் இணைவதற்கும் ஹரி சிங் தயக்கம் காட்டினார். இரண்டில் எதில் சேர்ந்தாலும் அது அவரது பேரரசில் பங்கம் விளைவிக்கிற விளைவுகளை ஏற்படுத்தி விடலாம் என அஞ்சினார். அவர் பாகிஸ்தானுடனான ஸ்டேண்ட்ஸ்டில் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். பின்னர் இந்தியாவுடன் கையெழுத்திடவும் விருப்பம் தெரிவித்தார். ஆனால் காஷ்மீர் சுதந்திரமான பகுதியாக நீடிக்கும் என அறிவித்தார். எனினும் இவரது முடிவை காஷ்மீரின் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான தேசிய கான்ஃபிரன்சின் தலைவரான ஷேக் அப்துல்லா எதிர்த்தார். இவர் ஹரி சிங் பதவி விலக வேண்டும் என வற்புறுத்தினார்.

காஷ்மீரை இணைத்துக் கொள்வதற்காக பாகிஸ்தான் அவர்களுக்கான பண்டப் பரிமாற்றங்கள் மற்றும் போக்குவரத்துகளைத் துண்டித்தது. பிரிவினையின் காரணமாக பஞ்சாப்பில் ஏற்பட்ட குழப்பநிலையின் காரணமாக இந்தியாவுடனான போக்குவரத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இந்த இரு நாடுகளுடன் காஷ்மீருக்கான ஒரே போக்குவரத்தாக வான்வழித் தொடர்பு இருந்தது. மகாராஜாவின் படைகளின் காரணமாக பொதுமக்களுக்கு இடையே ஏற்பட்ட கிளர்ச்சியில் பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடப்பதாக வதந்திகள் பரவின. அதன் பின்னர் விரைவில் பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப் புற மாகாணத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவரான பதான் மக்கள் எல்லையைக் கடந்து காஷ்மீருக்குள் நுழைந்தனர். படையெடுப்பாளர்கள் ஸ்ரீ நகரை நோக்கியும் துரிதமாக முன்னேறினர். காஷ்மீர் மகாராஜா, இராணுவ உதவியைக் கேட்டு, பதிலாக சேர்வடைவு முறையாவணத்தில் கையெழுத்திடுவதற்கு ஒப்புக்கொள்வதாகவும் ஷேக் அப்துல்லா தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்படலாம் என்றும் இந்தியாவுக்குக் கடிதம் எழுதினார்.  அந்த இணைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதனை உறுதி செய்வதற்கு எந்த சட்ட ரீதியான தேவைகள் இல்லாத போதும், பொது வாக்கெடுப்பு நடத்தியே அது உறுதி செய்யப்பட வேண்டும் என நேரு அறிவித்தார்.

இரும்புக் கரங்களில் வலுபெற்ற அகண்ட பாரதத்தின் கதை 

முதல் காஷ்மீர் போர் சமயத்தில் இந்தியப் படைகள் ஜம்மு, ஸ்ரீ நகர் மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளைக் கைப்பற்றின. ஆனால் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளுக்குள் செல்ல முடியாத குளிர்காலத்தின் தொடக்கத்தில் போர் நடந்ததால் அது கடுமையான சண்டையாக இருக்கவில்லை. அரசியல் மற்றும் போர்த்திற வல்லுநர்கள் திணறியிருந்த சூழலில் பிரதமர் நேரு தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவித்தார். பழங்குடியினர் படையெடுப்பை நிறுத்துவதில் தோல்வி ஏற்படும் என்ற கண்ணோட்டத்தில், பின்னர் ஐக்கிய நாடுகளை மத்தியஸ்தம் செய்ய அழைத்தார், இல்லையென்றால் சூழலில் இந்தியா, பாகிஸ்தான் மீதே படையெடுத்துத் தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும் என்று அவர் வாதாடினார். அங்கு பொது வாக்கெடுப்பு நடைபெறவில்லை. மேலும் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் காஷ்மீரில் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 இன் கீழ் இதற்காக சிறப்பு விதிகள் கொண்டு வரப்பட்டன. எனினும் இந்தியாவினால் காஷ்மீரில் ஒட்டுமொத்தமாக நிர்வாகக் கட்டுப்பாட்டைப் பெற முடியவில்லை. 1947 ஆம் ஆண்டு காஷ்மீரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அந்தப் பகுதிகள் தற்போது 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' என இந்திய அரசாங்கத்தால் குறிப்பிடப்படுகின்றன. 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சீனா - இந்தியப் போரில், லடாக் பகுதியின் வட கிழக்கு எல்லைப்புறப் பகுதியான அக்சாய் சின் பகுதியை சீனா கைப்பற்றியது. தற்போதும் அப்பகுதியை சீனா கட்டுப்படுத்தி நிர்வகிக்கிறது. இங்கும் படேலின் நிர்வாக கணிப்பு ஊர்ஜிதமாகிவிட்டது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP