ரம்ஜான் ஸ்பெஷல்: சத்தானா ஃபிர்னி!

இனிப்பு வகைகளில் இந்த ஃபிர்னி மிகவும் சத்தானது, சுவையானது.
 | 

ரம்ஜான் ஸ்பெஷல்: சத்தானா ஃபிர்னி!

இனிப்பு வகைகளில் இந்த ஃபிர்னி மிகவும் சத்தானது, சுவையானது. இந்த ரக இனிப்புக்களின் பிறப்பிடம் ஜம்மு – காஷ்மீர், ஆனால் நோன்பு காலங்களிலும் ரம்ஜான் பண்டிகைக்கும் அனைத்து இஸ்லாமிய வீடுகளிலும் இது செய்யப் படும். நிறைய நட்ஸ் வகைகள் சேர்க்கப் படுவதால் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த வகை இனிப்புப் பண்டம் இது. 

தேவையானப் பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம் (அல்லது தேவைக்கேற்ப), சுண்டக்காய்ச்சிய பால் - 400 மி.லி, மில்க் மெய்ட்    - 100மி.லி, பாதாம் பருப்பு - 25 (எண்ணிக்கை), முந்திரிப்பருப்பு - 15, பிஸ்தா - 100கி, தண்ணீர் - 500மி.

செய்முறை:
பாஸ்மதி அரிசியை  20 நிமிடம் ஊற வைத்து, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
மூன்று பருப்புகளையும் 10 நிமிடம் ஊற வைத்து நீரை வடித்து விட்டு, பாதாம் பிஸ்தா இரண்டையும் தோல் நீக்கவும்.
மூன்று பருப்புகளிலும் பாதியை எடுத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
மீதியை மெல்லிய இழைகளாக சீவிக்கொள்ளவும்.
பிறகு அவைகளை ஒரு ஸ்பூன் நெய்யில் 2 நொடிகள் போட்டு எடுக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள அரிசியையும், நீரையும் கலந்து அடுப்பை மிதமான தணலில் வைத்து விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் விட்டாலும் கட்டியாகி விடும் என்பதால், கவனம் அதிகம் வேண்டும். மாவு வெந்து இறுகி வரும்போது பால், அரைத்து வைத்துள்ள விழுது, மில்க் மெய்ட் எல்லாம் சேர்த்துக் கிளறவும். மிகவும் கெட்டியில்லாமல் தளர்வாக இருக்க வேண்டும்.இரண்டு கொதிவந்ததும் சர்க்கரையைக் கலந்து சிறிது கொதிக்க விடவும். பிறகு நெய்யில் போட்டு வைத்திருக்கும் நட்ஸ்களை தூவி இறக்கவும். இந்த ஃபிர்னி மீடியம் அடர்த்தியில் இருக்க வேண்டும். இதனை ஃபிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக சாப்பிட, உங்கள் மனமும் குளிர்ந்துப் போகும்
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP