ரம்ஜான் ஸ்பெஷல்: அரேபியர்களுக்குப் பிடித்த கப்ஸா ரைஸ்!

சவுதி அரேபியா மக்களின் ஃபேவரிட் உணவு இது.
 | 

ரம்ஜான் ஸ்பெஷல்: அரேபியர்களுக்குப் பிடித்த கப்ஸா ரைஸ்!

சவுதி அரேபியா மக்களின் ஃபேவரிட் உணவு இது. 

தேவையானப் பொருட்கள்:  முழு கோழி - 1, அரிசி - அரை கிலோ, எண்ணெய் - 50 மி.லி, பட்டை ஒரு விரல் நீளம் - இரண்டு, ஏலக்காய் - மூன்று, கிராம்பு - நான்கு, வெங்காயம் - மூன்று, தக்காளி - மூன்று, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன், பட்டர் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: முழு கோழியை சுத்தம் செய்து பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும். நான்கு டம்ளர் நீரில் சுத்தம் செய்த கோழியை முழுவதுமாக சேர்த்து வேக விடவும். வெந்ததும் தண்ணீரை தனியாகவும், கோழியை தனியாகவும் வைத்துக் கொள்ளவும். 
வாணலியை காயவைத்து அதில் பட்டரை ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிவக்க விட வேண்டாம். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கி தனியாக வைத்துள்ள கோழி தண்ணீரை அதில் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அதில் அரிசியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு வேக வைத்துள்ள கோழியையும் அதனுடன் சேர்த்து தீயை குறைத்து தம் போட்டு வெந்ததும் இறக்கவும். 

இது தான் அரேபியர்களின் கப்ஸா சோறு.

குறிப்பு

இது சவுதி அரேபியா மக்கள் மிகவும் விரும்பி உண்ணும் உணவு. அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிட மாட்டார்கள். பிரியாணியில் கூட மசாலா அவ்வளவாக இருக்காது. சிலர் கோழியை நறுக்காமல் முழுதாகப் போட்டு செய்வார்கள். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP