ரம்ஜான் ஸ்பெஷல்: சூடான ஹலீம் சாப்பிடலாமா?

ஹலீம் என்பது மட்டன் மற்றும் சிக்கனில் செய்யப்படும், ஒரு வகையான ஹைதராபாதி அசைவ உணவு.
 | 

ரம்ஜான் ஸ்பெஷல்: சூடான ஹலீம் சாப்பிடலாமா?

ஹலீம் என்பது மட்டன் மற்றும் சிக்கனில் செய்யப்படும், ஒரு வகையான ஹைதராபாதி அசைவ உணவு. இதை அதிகமாக  முஸ்லிம் மக்கள் தான் அதிகம் சமைக்கிறார்கள். குறிப்பாக ரம்ஜான் நோன்பு காலங்களில் இதை செய்வார்கள். ரம்ஜான் மாதத்தில் பிரியாணியுடன். கஞ்சி போல அருந்தும் இந்த ஹலீமும் கட்டாயம் இருக்கும். இதை எப்படி செய்வது என பார்ப்போமா? 

தேவையானப் பொருட்கள்: எலும்பில்லாத, மெல்லியதாக கொத்திய சிக்கன் - 1 கிலோ, கோதுமை - 2 கப் (நீரில் 1 மணிநேரம் ஊற வைத்தது), வெங்காயம் - 3 (நறுக்கியது), துவரம் பருப்பு - 1/2 கப் (ஊற வைத்து, வேக வைத்தது), பட்டை - 2 பிரிஞ்சி இலை - 2, இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன், மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன், மிளகு தூள் - 1/2 டீஸ்பூன், சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன், கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது), புதினா - 1/2 கப் (நறுக்கியது), பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது), எலுமிச்சை சாறு - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. 

செய்முறை:  வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஊற வைத்திருக்கும் கோதுமையுடன் 6 கப் தண்ணீர் விட்டு, சுமார் 1/2 மணிநேரம் கொதிக்க விடவும். இதில் கோதுமை மென்மையாக வெந்திருக்க வேண்டும். பிறகு வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின் மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை மற்றும் பிரிஞ்ஜி இலை சேர்த்து தாளித்து, பின்னர் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, மிளகு தூள், சீரகப் பொடி மற்றும் 1/2 கப் தண்ணீர் விட்டு, 2 நிமிடம் கிளறவும்.

பிறகு அதில் சிக்கனை கழுவி போட்டு, அரைத்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து கிளறவும். இப்போது அதில் வேக வைத்துள்ள கோதுமையை சேர்க்கவும். பின் உப்பை சரி பார்த்துக் கொள்ளவும், தீயை குறைவாக வைத்து, 1/2 மணிநேரம், கிரேவி கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அதனை இறக்கி அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் தூவி, எலுமிச்சை சாற்றை  பிழிந்து, ஒரு முறை கிளறி, பொன்னிறமாக வதக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை தூவி பரிமாறவும். இப்போது சுவையான சிக்கன் ஹலீம் ரெடி!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP