பிராமணர் கோத்திரம் கூறி ராகுல் செய்யும் ஏமாற்று அரசியல்! 

உழைப்பின் பெயரால் படிப்படியாக ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலத்தின் முதலமைச்சராக தன்னை உயர்த்தி, பின்னர் பிரதமராக மின்னும் மோடி குறித்து இவர்கள் எடுத்துச் செல்லும் அரசியல் பலன் தராது.
 | 

பிராமணர் கோத்திரம் கூறி ராகுல் செய்யும் ஏமாற்று அரசியல்! 

தேர்தல் காலம் நெருங்கி வந்தாலே, நாட்டின் மூளை முடிக்கில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளவர் ராகுல். மதச்சார்பின்மைக்கு அடிபோட்டு பேசவும் சிறுபான்மையின வாக்குவங்கியை குறிவைத்தும் மசூதிகளுக்கும் சீக்கிய கோயில்களுக்கும் போவதுமென திரிகிறார் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ராகுல் காந்தி. அவரது இந்த அரசியல் சாதாரண குடிமகனுக்கும் நன்கு தெரியும். 

ஆனால், தற்போது தனது கோத்திரத்தைக் கூறி புது வகை உத்தியை கையில் எடுத்துள்ளார் ராகுல். 

கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராஜ் பப்பர், சி.பி. ஜோஷி ஆகியோர் பிரதமர் மோடியைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி சர்ச்சையான கருத்துகளை கூறி மலிவு அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் பிரமதர் மோடியின் பரம்பரை குறித்து சர்ச்சையாகப் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே, காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் பிரதமர் மோடியின் அம்மா வயதுபோல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து செல்கிறது என்று பிரதமர் மோடியின் தாயாரை அவதூறாகப் பேசினார். 

இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா, மகாகாளேஸ்வரர் கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தியின் கோத்திரம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மோடியும் இதனைத் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பதிலடி தந்தார்.

இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதியில்லாத சோம்நாத் கோயிலுக்கு கடந்த ஆண்டு ராகுல் காந்தி சென்றபோது, அவர் பூணூல் அணிந்த சிவபக்தர் என விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இதனை சுட்டிக்க்காட்டியே பாஜக செய்தித் தொடர்பாளரின் கேள்வி அமைந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல் புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலின் பூஜையில் பங்கேற்றார்.

பிராமணர் கோத்திரம் கூறி ராகுல் செய்யும் ஏமாற்று அரசியல்! 

அப்போது அங்கிருந்த பூசாரி, ராகுலின் கோத்திரம் குறித்து கேட்க, தான் ஒரு கவுல் பிராமணர் என பதிலளித்த ராகுல், முன்னோர்களின் பெயர்களையும் (கையிலிருந்த ஆவணத்தின் உதவியுடன்) கூறினார்.  கவுல் எனப்படுவது காஷ்மீர் பிராமணர்களை குறிக்கும் சொல். சிறப்பாக பிறந்தவன் என்பது தான் இதன் நேரடி பொருள். 

பிரதமர் மோடி பிராமணர் அல்லாத தாழ்ந்த சமுகத்திலிருந்து வந்ததால் அவரால் இந்துக்களின் நலன் குறித்து சிந்திக்க முடியாது என்று மலிவாக பேசி வரும் காங்கிரஸார்கள் என்றாவது காங்கிரஸ் தலைமை அதாவது அந்தக் குடும்பத்தின் பின்னணியை வெளிப்படையாக கூறி அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்கிற உண்மையை அம்பலப்படுத்த முடியுமா?  உழைப்பின் பெயரால் உயர்ந்து படிப்படியாக கட்சிக்காகவும் மக்கள் சமுதாயத்துக்காகவும் போராடி, அதன் பலனாக ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக தன்னை உயர்த்தி பிரபலமாகி, மக்களின் மனங்களைக் கவர்ந்து பின்னர் பிரதமராக மின்னும் நரேந்திர மோடி குறித்து இவர்கள் எடுத்துச் செல்லும் அரசியல் ஒரு நாளுக்கும் பலன் தராது. ஆனால் சில உண்மைகள் குறித்து நிச்சயம் சிந்திக்க வேண்டி உள்ளது. அது தான் ராகுல் கூறும் தனது காஷ்மீரி பிராமன கோத்திரம். இது தற்போது எங்கிருந்து வந்தது.  

மோடி வசைக்கு வகுக்கப்பட்ட ராகுலின் 'பரம்பரை' பொய்கள் 

2014 பிரதமர் வேட்பாளராக களம் இறங்கிய மோடியை பார்த்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ், ராகுலின் பரம்பரையை பாருங்கள்... நேரு, இந்திரா, ராஜீவ் என அத்தனை பேரும் பிரபலங்கள். மோடியின் அப்பா யாரென்று கூடத் தெரியாது என்று பேசினர். அக்கட்சியின் தலைவரோ ஒரு பிரதமர் வேட்பாளர் என்றும் பாராமல், மோடியை காங்கிரஸ் அலுவலகத்தில் டீ விற்க சொல்லுங்கள் என்றார். இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலை தான் காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது.

முதலில் இவர்கள் எப்படி பிராமணர்கள் ஆக முடியும், சரி விடுங்கள் முதலில் இவர்கள் இந்து மத பின்னணியில் பிறந்தவர்களா? கோத்திரம் என்பது இன்னார் வழி வந்தவர்கள் என்பது அல்லது வம்சாவழி என்று குறிப்பிடும் அடையாளம் ஆகும்.  இந்திராவுக்கு பார்ஸி இனத்தவரோடு திருமணம் நடைபெற்றது. அவரது இரண்டு குழந்தைகள் ராகுல் காந்தியும் பிரியங்கா வத்ராவும் முதலில் பார்ஸிக்கள் அல்லது இஸ்லாமியர்களாகவே அடையாளம் காணப்பட வேண்டும். 

பிராமணர் கோத்திரம் கூறி ராகுல் செய்யும் ஏமாற்று அரசியல்! 

ஏனெனில் முன்னாள் பிரதமாராக இருந்தாலும் இந்திராவுக்கு பிறந்த குழந்தைகள் அவர்களது தந்தையின் குலத்தையே ஆவண அடையளமாகக் கொள்ள முடியும். அடுத்ததாக ராஜீவ் காந்தி, இத்தாலி நாட்டு கிறிஸ்தவ பெண்ணான சோனியா மெய்னோவை மணந்தார். பார்ஸி அல்லது இஸ்லாமிய அடையாளம் கொண்ட நபர் கிறிஸ்தவ பெண்ணை மணந்த பின் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளான ராகுல் மற்றும் பிரியங்கா எவ்வாறு இந்து மத அடையாளத்தைக் கொள்ள முடியும், பின்னர் தானே இவர்கள் பிராமண கோத்திரத்தை கொள்ள முடியும். 

அரசியல் செய்து பிழைக்க நாட்டில் அனைத்து பிரிவினைவாத முயற்சிகளையும் பின்பற்றியாயிற்று தற்போது இந்தத் தேர்தலுக்கு நெடுங்காலமாக கையாண்டு வந்த பரம்பரை அரசியலை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. இறுதியில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக இருக்கட்டும். ஆனால் இவர்களது மலிவான அரசியல் குறித்து உரக்க பேசியாக வேண்டியதும் சிந்திக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP