தீபாவளிக்கு புது போன் வாங்க திட்டமா? பட்ஜெட் விலையில் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

பண்டிகை காலம் என்பதால் ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்லைன் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு தள்ளுபடிகள் வழங்கி வருகின்றன. பட்ஜெட் விலையில் புத்தம்புது அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போன்கள் சந்தையில் குவிந்துள்ளன.
 | 

தீபாவளிக்கு புது போன் வாங்க திட்டமா? பட்ஜெட் விலையில் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

பண்டிகை காலம் என்பதால் ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்லைன் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு தள்ளுபடிகள் வழங்கி வருகின்றன. பட்ஜெட் விலையில் புத்தம்புது அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போன்கள் சந்தையில் குவிந்துள்ளன. அதில், சிறந்த ஆஃபர் வழங்கும் 5 போன்கள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்

நோக்கியா 6.1 ப்ளஸ்:

மொபைல்போன் சந்தையின் பழைய ‘தாதா’வான நோக்கியா, பட்ஜெட் விலையில் வெளியிட்டுள்ள 6.1 ப்ளஸ் மாடல் ரூ.15 ஆயிரம் விலையில் கிடைக்கிறது. 2280*1080 பிக்சல் ரெசலியுசனில் 5.8 இன்ச் முழு எச்.டி டிஸ்ப்ளே உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ப்ராஸசர், பின்புறம் டூயல் கேமரா 16 எம்.பி ஆட்டோபோகஸ் சென்சார் உள்ளது. முன்புறமும் 16 எம்.பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் என இரண்டு வகைகளில் நோக்கியா 6.1 ப்ளஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல்மி 2 புரோ:

சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்ற ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள 2 புரோ மாடல் ரூ.13 ஆயிரம் மற்றும் ரூ.16 ஆயிரம் விலையில் கிடைக்கிறது. 6.3 இன்ச் டிஸ்ப்ளே (1080*2340 பிக்சல்) முழு எச்.டி டிஸ்ப்ளே அம்சம் இந்த மாடலில் உள்ளது. குவால்கோம் ஆக்டா-கோர் எனேபிள் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 600 ப்ராஸசர் இருப்பதால், சிறந்த பங்களிப்பை மொபைல் தருகிறது. 4 ஜி.பி, 6 ஜி.பி மற்றும் 8 ஜி.பி என்று மூன்று ரேம் வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. 64 ஜி.பி மற்றும் 128 ஜி.பி நினைவக திறன் கொண்டதாக இருக்கிறது ரியல்மி 2 புரொ.

3500 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி இருந்தாலும் சார்ஜ் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதாக பயன்படுத்தியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹானர் ப்ளே:

ஹூவாய் ஆன்லைன் பிரான்டான ஹானர் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமானது. ஹானர் பிளே ஸ்மார்ட்போன் கேமிங் செய்ய சிறப்பானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹானர் பிளே மாடலில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, கிரின் 970 பிராசஸர், சிறப்பான டர்போ கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. சார்ந்த 20 எம்.பி டூயல் பிரைமரி கேமரா சென்சார் உள்ளதால் போர்டிரெயிட் படங்களையும் மிகத் தெளிவாக எடுக்கலாம். 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

டூயல் சிம், வோல்ட் 4ஜி என்று பட்ஜெட் ஸ்மார்ட் போனுக்கு உண்டான அனைத்து அம்சங்களையும் ஹானர் பிளே கொண்டுள்ளது. 6 ஜி.பி மற்றும் 8 ஜி.பி ரேம், 64 ஜி.பி/128 ஜி.பி/ 256 ஜி.பி என்ற நினைவக திறனை கொண்ட வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஜியோமி போகோ எப் 1:

ஜியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஒரு தனித்த இடத்தை பிடித்துள்ளது. குறுகிய காலத்திலேயே இந்த நிறுவனத்தின் ஸ்மார்போன்கள் விற்பனையில் சாதனைப்படைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஜியோமி நிறுவனம் போகோபோன் என்ற துணை பிராண்டு மூலம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்டீல் புளூ, கிராபைட் பிளாக், ரோசோ ரெட் போன்ற ஆகிய மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் போகோ எப்1 ஸ்மார்ட்போனில் சிறப்பு எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு எடிஷன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி நினைவக திறனை கொண்டிருக்கிறது. 2.5டி கொரில்லா கிளாஸ், ஸ்நாப்டிராகன் 845 பிராஸசர், 20 மெகா பிக்சல் செல்பி கேமரா, 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் டூயல் கேமரா, ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1, டூயல் சிம் வதிகள் உள்ளன. ரேமின் வகைக்கேற்ப ரூ.21 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை போகோ எப் 1 கிடைக்கிறது.

ரெட்மி நோட் 5 புரோ:

2018-ம் ஆண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று. நோட் சீரிஸ் வரிசையில் வெளியான 5 புரோ ரூ.14 ஆயிரம் விலையில் இருந்து கிடைக்கிறது. 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு மற்றும் குவால்காம் ஸ்நாப்டிராகன் 625 பிராசஸர் சிப்செட் கொண்டு இயங்குப்படுகின்ற மொபைல் போன் 5.99 அங்குல முழு ஹெச்டி திரையை பெற்றுள்ளது. 6 மற்றும் 8 ஜி.பி ரேம், 64 ஜி.பி நினைவகத் திறனை கொண்டுள்ளது.

எல்இடி ஃபிளாஷ் பெற்ற 12 மெகாபிகசல் சென்சாருடன் டூயல் கேமரா, முன்புறத்தில் செல்பி, வீடியோ அழைப்பினை எதிர்கொள்ள ஏற்ற வகையில் எல்இடி செல்பி லைட் பெற்ற 12 மெகாபிகசல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP