கிறிஸ்தவர்களை கவர்ந்திழுக்க 'பலே' தேர்தல் அறிக்கை: தெலங்கானாவிலும் வேலையை காட்டும் காங்கிரஸ்

மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி ஆட்சியை கைப்பற்றும் உத்தியை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கையாண்டு வருகிறது என்பதற்கு மற்றொரு சான்றாக அதன் தெலங்கானா மாநில தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.
 | 

கிறிஸ்தவர்களை கவர்ந்திழுக்க 'பலே' தேர்தல் அறிக்கை: தெலங்கானாவிலும் வேலையை காட்டும் காங்கிரஸ்

வாக்கு வங்கிகள் இருக்கும் இடத்தை தேர்ந்தெடுத்து, மக்களை வஞ்சித்து பிளவுபடுத்தி ஆட்சியை கைபற்றும் உத்தியை காங்கிரஸ் கட்சி  அனைத்து  தேர்தல்களின் போதும் கையாண்டு வருகிறது என்பதற்கு மற்றொரு சான்றாக அதன் தெலங்கானா மாநில தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

மதச்சார்பற்ற தேசியக் கட்சி என்றுக் கூறிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சி, நாட்டில் சிறுபான்மையினர் மற்றும் கிறிஸ்தவர்களை தவிர மற்ற மக்கள் இல்லை என்பது போல கிறிஸ்தவர்களுக்கென பிரத்யேக ஈர்ப்பு வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை தெலங்கானாவில் வெளியிட்டு உள்ளது. 

அதில் கிறிஸ்தவ பிஷப்களை பாதுகாக்கும் அம்சங்கள், பாதிரியார்களுக்கு ஊதியம், கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு நிதி, கிறஸ்தவ சங்கங்களுக்கு நிலம், கிறிஸ்தவ புனித ஸ்தலங்களுக்கு செல்ல பணம், கிறிஸ்தவ மதத்தலைவர்களுக்கு நாடாளுமன்ற தொகுதிகளில் சீட்டு, கிறிஸ்தவ பத்திரிகையாளர்களுக்கு வீடு, அவர்களது குடும்பத்தினருக்கு சலுகைகள் என்பது போன்ற அந்த சமுதாயத்தை மக்களை ஈர்க்கும் கவர்ச்சிகர அம்சங்கள் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.  

ஒருபக்கம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை மேலும் வலுபடுத்தும் வகையில் இத்தகைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. 

மக்களின் வரிப்பணத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு அனைத்து வகையிலான திட்டங்களும் அதற்கும் மேலான சலுகைகளும் போய் சேரும் வகையில் திட்டமிட்டு வாக்கு வங்கியை மட்டுமே குறிவைத்து மற்ற சமுதாய மக்களை வஞ்சிக்கும் விதமாக தெலங்கானாவில் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அள்ளி வீசியுள்ளது. 

கிறிஸ்தவர்களை கவர்ந்திழுக்க 'பலே' தேர்தல் அறிக்கை: தெலங்கானாவிலும் வேலையை காட்டும் காங்கிரஸ்

கேரளாவில் பிஷப் பாலியல் விவகாரத்தில் சிக்கிய நிலையில், இது போலானவர்களை பாதுகாக்கும் இத்தகைய தேர்தல் அறிக்கை என்பது பலாத்கார குற்றவாளிகளை மேலும் ஊக்கப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

கிறிஸ்தவ அமைப்புகளின் தேவாலயங்கள் அனைத்தும் வாடிகனின் ஆணைக்கிணங்க அவர்களது சுய சட்டதிட்டத்துக்கு உட்பட்டே நடக்கும் நிலையில் அவர்களுக்கு நிதி மற்றும் நீண்ட பல சொகுசு சலுகைகள் மட்டும் மக்களின் வரிப்பணத்திலிருந்து வாக்குகளுக்காக விற்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்றும் சமூக செயற்பாட்டளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

முற்றிலும் தனியார் வசம் போல, மேற்கத்திய நாடுகளில் உள்ள அமைப்புகளின் கீழ் இஎங்கும் கிறிஸ்தவ பிஷப்களுக்கு மக்கள் பணத்திலிருந்து ஊதியமும் விவசாய மற்றும் தொழிற்சாலை அமைக்கக் கூடிய நிலங்களையும் எதற்காக வழங்க வேண்டும் என்ற கேள்வி ஓங்கி எழுந்துள்ளது. 

அதேபோல பிற்படுத்தப்பட்டோர் சலுகைகளை பிடுங்கும் நோக்கத்தோடு, தலித் என்ற முகத் திரைக்குள் வரும் அளவுக்கு அதிக அளவிலான மதமாற்றங்கள் நடந்துவருவதற்கு பின்னணியில் கிறிஸ்தவ மிஷினரிகள் இயங்கும் நிலையில், மதசார்பற்ற காங்கிரஸ் எனக் கூறிக் கொள்ளும் கட்சி, வெறும் வாக்குவங்கிக்காக மக்களின் வியர்வையில் உருவான நாட்டின் மதிப்புகளை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு பக்கம் தேர்தல் நேரத்தில் இந்துக்களின் கோயில்களுக்கு சென்று அவர்களது பாதுகாவலர் போல தோற்றம் ஏற்படுத்தி வரும் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி , மறுபக்கம் இத்தகைய வாக்குவங்கிக்கான அரசியல் நோக்கத்திலான தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்டிருப்பதன் உள்நோக்கம் மக்களுக்கு புரிந்த காரணத்தினாலேயே கடந்த தேர்தலின்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போதும் போலி மதசார்பற்ற கட்சிகளின் முகத்திரைகள் தொடர்ந்து கிழிந்துகொண்டே தான் வருகிறது என்பதும் வரும் தேர்தல்களிலும் புலப்படும் என்பது உறுதி. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP