இந்தியாவை தாக்க மறுத்த அமெரிக்கா - கார்கில் நினைவு நாள்

கடந்த 1999-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த கார்கில் போரை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாது.
 | 

இந்தியாவை தாக்க மறுத்த அமெரிக்கா - கார்கில் நினைவு நாள்

கடந்த 1999-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த கார்கில் போரை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கிலில் நடந்த இந்தப் போர் ஆபரேஷன் விஜய் என்றும் அழைக்கப் படுகிறது. ஜூலை 26-ம் தேதி முடிவுக்கு வந்த இந்தப் போரில் 527 ராணுவ வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தனர். 1363 பேர் படுகாயமடைந்தனர். இதைப்பற்றி இன்னும் சில விஷயங்களைத் தெரிந்துக் கொள்வோம். 

இந்த கார்கில் போர் 1999-ம் ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூலை வரை நடைப்பெற்றது. 

அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரஃப், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்குத் தெரியாமல் போரைத் திட்டமிட்டார். 

இந்தியப் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் தொலைப்பேசியில் அழைத்து எல்லை நிலவரம் குறித்துப் பேசிய பின்னர்தான் தனக்குத் தாக்குதல் பற்றித் தெரிய வந்தது என நவாஸ் ஷெரீஃப் கூறினார். 

உளவுத்துறையிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்திய இராணுவம் "ஆபரேஷன் விஜய்"யை கையாண்டது. 

1999-ம் ஆண்டு ஜூலை 26-ம் நாள் இந்த போர் வெற்றி பெற்றதாக இந்திய ராணுவம் அறிவித்தது. இதை ஒவ்வொரு ஆண்டும் கார்கில் நினைவு நாளாக இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. 

அனால் இந்த வெற்றிக்கு விலை அதிகம். இதில் 527 ராணுவ வீரர்கள் இறந்தனர். 

இரண்டு இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டழித்தது. 

இந்தப் போரில் அமெரிக்காவையும் கலந்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால் அப்போதைய அதிபர் பில்கிளிண்டன் அதனை மறுத்து விட்டார். 

பாகிஸ்தான் ராணுவத்தினர் பின்வாங்கியபோது, இந்திய ஆயுதப் படைகள் மீதமுள்ளவர்களை தாக்கி, ஜூலை 26-க்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர திட்டமிடப் பட்டது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP