வேண்டா குப்பையிலும் தகவல் திருட்டை நடத்த முடியும்....அதுவே தொழில்நுட்பத்தின் நீட்சி

தகவல் திருட்டு என்பது நுட்பமானது. நம் அன்றாட வாழ்க்கையில், தொழில்நுட்பத்தை நம்பியே நகர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் அதற்கு பெரும்கூலியாக தவல்களை தாரைவார்க்கிறோம். ''internet of things'-க்கு பூட்டு இல்லை.
 | 

வேண்டா குப்பையிலும் தகவல் திருட்டை நடத்த முடியும்....அதுவே தொழில்நுட்பத்தின் நீட்சி

சமீப காலமாக பல டிஜிட்டல் தொழில்நுட்ப திருட்டு குறித்து நாம் பரவலாக பேசி வருகிறோம். கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் மூலம் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை அரசியல் மற்றும் பிற தேவைகளுக்காக விற்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பகிரங்க குற்றச்சாட்டை வெளியிட்டார். இந்த விவகாரம் பல நாடுகளில் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் தகவல் திருட்டு என்பது மேலும் நுட்பமானது. நம் அன்றாட வாழ்க்கையில், தொழில்நுட்பத்தை நம்பியே நகர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் அதற்கு பெரும்கூலியாக நாம் அனுதினமும் நமது மதிப்புமிகு தவல்களைத் தொடர்ந்து தாரைவார்த்து வருகிறோம்.

உதாரணமாக, நீங்கள் செல்போனில் ஆப்-களை இன்ஸ்டால் கெய்யும்போது, நுழைவில் சில ஒப்புதல்களை கேட்கும், அதாவது உங்களது கான்டேக்ட் லிஸ்ட், கேமரா, காலேண்டர், செட்டிங்க்ஸ் ஆகியவற்றை இயக்கலாமா? என்ற ஒப்புதல் கேட்கப்படும். ஆனால் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் நம்மால் பார்க்கமுடியாத சில நுணுக்கமான விஷயங்கள் அடங்கியுள்ளன.அதில் டிஸ்ப்ளே, ஸ்க்ரீன் ஷேரிங் எனப்படுவது மிகவும் அபாயகரமான ஒன்று, இதன் மூலம் நீங்கள் ஸ்க்ரீனில் டைப் செய்யும் அனைத்து தகவல்களையும் ஊடுருவ முடியும். 

வங்கி கணக்குகளின் Mpin போன்றவை, கான்டேக்ட் லிஸ்ட் ஆகியவை நுணுக்கமான ஆபத்தை ஏற்படுத்துவன. 

தகவல் திருட்டு என்பதே சமீப பத்து அல்லது இருபது ஆண்டுகளாக தான் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது நவீன திருட்டு என்று அறியப்படாத தொழில்நுட்பத்தின் புள்ளியின் தொடக்கம் முதலே,து தகவல் கசிவும், தரவுகள் திருடப்படுவதும் அரங்கேறி வருகிறது. 

வேண்டா குப்பையிலும் தகவல் திருட்டை நடத்த முடியும்....அதுவே தொழில்நுட்பத்தின் நீட்சி

கடந்த 2010ஆம் ஆண்டு முதன்முதலாக சைபர் பாதுகாப்பு விதிமீறல் முறைகள் குறித்து நியூயார்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அஃபினிட்டி ஹெல்த் ப்ளான் என்ற நியூயார்க்கை சேர்ந்த ஹெல்த் கேர் நிறுவனம் தான் முதன் முதலாக சைபர் ஹேக்கிங் குறித்து கண்டறிந்தது. அதாவது அந்த நிறுவன பாலிசி தாரர்களின் கோப்புகள் அனைத்தும் நகல் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் மெஷினில் ஹார்ட் டிஸ்க் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏனெனில் நகலெடுக்கும் மெஷினில் ஹார்ட் டிரைவ் இருக்கும் என்பது யாரும் எதிர்ப்பார்த்திடாத ஒன்று.  

2013ல் அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகளுக்கான துறை, அந்த நிறுவன கோப்புகள் குறித்து தணிக்கை செய்ய முற்பட்டபோது அம்பலமான இந்த விவகாரத்தால் சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பேரின் தகவல் கசிவு தடுக்கப்பட்டது.  இதனால் அந்த நிறுவனத்துக்கு, அந்நாட்டு அரசின் தணிக்கைத் துறை பொதுமக்களின் தரவுகளை பாதுகாக்க தவறியதாக சுமார் 1.2 மில்லியன் டாலர் மதிப்பில் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

வேண்டா குப்பையிலும் தகவல் திருட்டை நடத்த முடியும்....அதுவே தொழில்நுட்பத்தின் நீட்சி 

எனவே நாம் பயன்படுத்தும் அனைத்து புற தொழில்நுட்ப சாதனங்களிலும் நாம் நினைத்துப் பார்க்காத முடியாத அளவுக்கு அபாயங்கள் இருப்பதாக லாஸ்ஸரோட்டி கூறுகிறார். இவர் அமெரிக்க பணியிட சட்ட நிறுவனம் ஒன்றின் முதன்மையான பதவியிலிருந்து வருகிறார். தனது சட்ட நிறுவனத்தின் மூலம் பல நிறுவனங்களுக்கு தனியுரிமை, மின்-தொடர்பு தகவல் பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

நாம் நமது செல்போன்கள் மூலம் தான் தகவல் திருட்டு நடைபெறுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது போல, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நகல் இயந்திரங்கள், தொலைநகல் இயந்திரங்கள், ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் USB டிரைவ்கள் என அனைத்து வகையான புற சாதனங்களிலும் நாம் நினைத்துப் பார்க்க மடியாத அபாயங்கள் அடங்கியுள்ளதாக லாசரோட்டி கூறுகிறார். அதாவது ''internet of things'', விரிவாக சொன்னால்,  இணைய சேவைக்கு தொடர்புடைய அவற்றுக்கு எந்தவகையிலும் தொடர்புடையதாக இருக்கக் கூடிய சாதனங்களாலும் தரவுகள் திருடப்படலாம் அல்லது கசியலாம்.''internet of things'-க்கு பூட்டு இல்லை. ஒரு வேளை இருந்தாலும் அதற்கு நுணுக்கமான சாவி உண்டு. 

நாம் நமது சாதனங்களில் பொருத்தி பயன்படுத்தக் கூடிய எந்த ஒரு இணைப்பு கருவிகளாலும் கசிவு அல்லது தகவல் தரவுகள் திருட்டு நடக்கலாம். அது குறித்த அறிவோ தெளிவோ நமக்கு எளிதில் ஏற்படாமல் போகலாம், ஏனெனில் அந்தக் கருவி நமக்கு எங்கு எவ்வாறு தயாரானது என்றே நமக்கு தெரியவாய்ப்பில்லை என்கிறார் பென்சில்வேனியாவில் அமைந்துள்ள கெட்டிஸ்பர்க் என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாசன் மெக்நியூ. 

மினி ஸ்டோரேஜ் டிவைசஸ் எனப்படும் மினி சேமிப்பு சாதனங்களை இவர் ஒரு அசுத்தமான ஊசியுடன் ஒப்பிட்டு உதாரணம் கூறுகிறார். சேமிப்பு சாதனங்கள் ஏற்கெனவே நாம் வைத்திருக்கும் தகவல்களுக்கு தீங்கிழைக்கும் மென்பொருள்களை கொண்டிருக்கலாம். அவற்றின் மூலம் ஹேக்கர்கள் பல்வேறு ஊடுருவல் சாதனைங்களைக் கொண்டு நெட்வொர்க்கை அணுகி பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்கிறார் ஜாசன் மெக்நியூ.

தனி நபர்கள், சில நிறுவனங்கள் இது குறித்து மதிப்பீடு செய்யாமல் இருந்தாலும், தேசிய பாதுகாப்பு முகமைகள் அனைத்து ஹார்ட் டிரைவ்கள்,  சாதனங்கள் மற்றும் துருப்புகளை உயர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மதிப்பீடு செய்வதாக குறிப்பிடுகிறார். பாதுகாப்பான கருவிகள் குறித்து நுகர்வோர் அறிக்கை எதுவும் அதிகாரபூர்வமாக இல்லாத நிலையில், தேசிய பாதுகாப்பு முகமைகள் சில வரையறை செய்யப்பட்ட பாதுகாப்பான கருவிகளை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும் அவையும் நூறு சதவீத பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரப்படாதவை தான். 

''internet of things'' என்று வந்துவிட்டால்,  எந்த நபரும் தன்னை பாதுகாத்துக்கொள்ள இயலாத நிலையில் மட்டுமே உள்ளோம் என்பதே நடைமுறை உண்மை. எவராலும், எவரையும் காப்பாற்ற முடியாத கையறு நிலையில் மட்டுமே தற்போதைய தொழில்நுட்பம் உலக மக்கள் அனைவரையும் வைத்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP