கர்நாடக இசையில் ஊடுருவலும் கிறிஸ்தவ கலாசாரத் திருட்டும்! 

ஸ்ரீராம கீர்த்தனைகள் ஏசு கிறிஸ்து கீர்த்தனைகளாகும்? ஆனால் கர்நாடக இசையில் இந்தக் கலப்படம் சமீபகாலமாக நடந்தேறி வருகிறது. இது வெறும் கர்நாடக இசை மீதான பற்றின் வெளிப்பாடு அல்ல, கிறிஸ்தவத்துக்கு ஞானஸ்தானம் செய்யும் முயற்சி
 | 

கர்நாடக இசையில் ஊடுருவலும் கிறிஸ்தவ கலாசாரத் திருட்டும்! 

ஸ்ரீ ராம கீர்த்தனைகள் ஏசு கிறிஸ்து கீர்த்தனைகளாகும்? ஆனால் கர்நாடக இசையில் இந்தக் கலப்படம் சமீபகாலமாக நடந்தேறி வருகிறது. இது வெறும் கர்நாடக இசை மீதான பற்றின் வெளிப்பாடு அல்ல, முற்றிலும் கர்நாடக இசையை கிறிஸ்தவத்துக்கு மத மாற்றம் செய்து ஞானஸ்தானம் செய்வது.  தென் இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் சமீப காலமாக இந்தப் போக்கு சில கர்நாடக இசைக் கலைஞர்களை குறிவைத்து ஈர்த்து நடத்தப்படுகிறது. இதற்கு அவர்களில் பலரும் விலை போய்விட்டனர் அல்லது ஏமாந்துவிட்டனர் அல்லது வெற்று புகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டனர் என்று தான் கூற வேண்டும். 

கிறிஸ்தவ பாடல் பாடிய நித்யஸ்ரீ மகாதேவன், கிறிஸ்தவ பாடல் தொகுப்பை வெளியிட்ட அருணா சாய்ராம் ஆகியோருக்கும் எதிர்ப்பு கிளம்பியது. மதமாற்றம் செய்யும் அமைப்புகளுக்கு இவர்கள் துணை போவதாகவும் சமூக வலைதளங்களில் கர்நாடக இசைப் பிரியர்களாலும் இந்துத்துவ அமைப்புகளாலும் விமர்சிக்கப்பட்டனர். பின்னர் நித்யஸ்ரீ போன்றோர் இதற்கு மன்னிப்புக் கோரினர்.  

தேவாலயத்தில் கச்சேரி நடத்திய டி.எம்.கிருஷ்ணாவுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. மதமாற்றம் செய்யும் அமைப்புகளுக்கு இவர்கள் துணை போவதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டனர். எனினும் டி.எம். கிருஷ்ணா போன்றோர் இந்த விவகாரத்தில் தன்னை முன்னிலைப் படுத்த தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆகஸ்டு மாதம் பிரபல பாடகர் ஓ.எஸ்.அருணின் 'இயேசுவின் சங்கம சங்கீதம்' என்ற இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது.  இந்த நிகழ்ச்சியில், இயேசுநாதரை புகழ்ந்து பாடும் கீர்த்தனைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்து அமைப்புகளும் மற்றும் கர்நாடக இசை ரசிகர்களும் கடுமையாக எதிர்த்ததை அடுத்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 

மத ரீதியான விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, தியாகராஜரின் ராமர் கீர்த்தனைகளில் வார்த்தைகள் மட்டும் மாற்றப்பட்டு, கிறிஸ்தவ பாடலாக்கப் படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்துக்களின் கலாசாரத்தில் ஊடுருவ முயற்சிப்பது கிறிஸ்தவ அமைப்புகளுக்கு ஒன்றும் புதிதல்ல.  தேவாலயக் குழுக்களின் இது போன்ற செயல்கள் காலங்காலமாக திட்டமிட்டே அரங்கேறி வருகிறது. 

கர்நாடக இசையில் ஊடுருவலும் கிறிஸ்தவ கலாசாரத் திருட்டும்! 

அப்படி தான் விஷ்ணு சகஸ்ரநாமம், ஏசு நாதர் சகஸ்ரநாமமாக மாறியது. தற்போது ஸ்ரீ ராம கீர்த்தனைகள் ஏசு கிறிஸ்து கீர்த்தனைகளாக பார்க்கிறது.  இந்த சதித் திட்டத்தின் வடிவம் தான் நவீனமாக மாறுபட்டுள்ளது. ஆனால் நாகரீகமயமாக்கல் என்ற பேரிலான கலாச்சார கலப்படம் அப்படியே தான் இருக்கின்றது. 

500 வருடங்களுக்கு முன்னர் கர்நாடக இசையின் பிதாமகன் என அழைக்கப்படும் புரந்தரதாசர், வேத வயாசங்களை கற்றுத் தேர்ந்து அதன் அடிப்படையில் கர்நாடக இசைக்கு அடிப்படை பாடங்களை வகுத்தார். புரந்தரதாசர் சரளிவரிசை முதல் அலங்காரங்கள் ஆகியவற்றை உருவாக்கியதுடன், சங்கீத கீர்த்தனைகளை கற்க விரும்பும் மாணவர்களுக்கு எளிமையான பாடல்களையும் உருவாக்கினார். 

18ஆம் நூற்றாண்டில் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ராகங்களையும் தாளங்களையும் இயற்றினர்.  சியாமா சாஸ்திரிகள், தியாகராஜ சுவாமிகள் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் 14 ஆண்டு கால இடைவெளியில் திருவாரூரில் பிறந்தவர்கள்.

1762ல் திருவாரூரில் பிறந்த சியாமா சாஸ்திரிகள் தஞ்சாவூர் காமாட்சி அம்மனை தனது ஆத்மார்த்த தெய்வமாகப் பாவித்து, பல கீர்த்தனைகளை இயற்றியவர். நாகப்பட்டினம் நீலாயதாட்சி, திருவையாறு தர்மசம்வர்த்தனி, மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் மீது பல இனிமையான கீர்த்தனைகளை இயற்றியவர்.  1767ல் திருவாரூரில் பிறந்த தியாகராஜர் இராமரைப் பலவாறு உருவகப்படுத்தி தெலுங்கு மொழியில் அதிக கீர்த்தனைகளை சுவைபட இயற்றியவர். 1776ல் திருவாரூரில் பிறந்த முத்துசுவாமி தீட்சிதர் திருவாரூர் தியாகேசர், கமலாம்பாள், மற்றும் கணபதி ஆகியோர் மீது அதிக கீர்த்தனைகளை இயற்றியவர். இவர் இயற்றிய நவாவரண கீர்த்தனைகள் சங்கீத உலகுக்கு மாபெரும் வரப்பிரசாதமாகும். 

கலையும் கலாசாரமும் அனைவருக்கும் பொது தான். யாரும் அவர் விருப்பப்படி அவரவர் தெய்வங்களைப் பற்றியோ பிடித்த விஷயங்கள் பற்றியோ பாடிப் புகழலாம். ஆனால் எது கலாச்சார ஏற்பு, எது திருட்டு, எது திரிப்பு என்ற தெளிவு வேண்டும். இங்கு தான் பிரச்னை எழுகிறது. 

சமயத்தின் கருக்களை மறுத்து இசை, கவிதை, வாழ்வியல் என்ற பல உறுப்புகளை மட்டும் திட்டமிட்டு களவாட முயன்று கொண்டே இருக்கிறார்கள்.  ஆனால் நம் கலைஞர்கள் இதற்கு துணை போவது கொடுமை. அதைத் தட்டிக் கேட்டால், மத நல்லிணக்கம் குறித்து இவர்கள் பாடம் எடுப்பார்கள். ஆனால் இது மத நல்லினகத்தின் பேரில் செய்யும் திரிப்பு, இந்து மதத்தின் உள் தனது சமுதாய போதனைகளை கொண்டு வந்து இணையானதாய் காட்டு கிறிஸ்தவ சமுதாயத்தின் நீண்ட கால வழிமுறை தீவிரவாதம். 

இது குறித்து தமிழக ஆர்எஸ்எஸ் அமைப்பின் ராமநாதன் கூறுகையில், ''கர்நாடக இசை இந்துக்களுக்கு சொந்தமானது. சமீபத்தில் ஒ எஸ் அருண் கிறிஸ்தவ பாடல்களை கர்நாடக சங்கீதத்தில் திணித்து பாடினர். அது பகிரங்கமாக கண்டிக்கப்பட்டது.  பின்னர் நித்ய ஸ்ரீ மகாதேவனும் அதையே செய்தார். பின்னர் மன்னிப்பு கோரினார். 

ஆனால் மகசேசே விருது பெற்றதால் தன்னை சீர்திருத்தவாதி என்றும் மதச்சார்பற்றவர் என்றும் எண்ணிக்கொள்ளும் டிஎம் கிருஷ்ணா போன்றோர் தான் ஏசு கீர்த்தனைகளை பாடி வருகினறனர். இவர் எப்போதுமே செய்திகளில் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவரை அமெரிக்காவில் உள்ள இந்து கலாசார ஒருங்கினைப்பளர்கள் கூட புறக்கணித்துவிட்டனர். அவரது பாடல்களை கேட்க அவர்கள் தயாராக இல்லை. '' என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP