கார்க்கில் ஹீரோ கேப்டன் மனோஜ் குமார் பாண்டே!

தனக்கு முன் 100 துப்பாக்கிகள் இருப்பதை அறிந்தும் கூட சற்றும் யோசிக்காமல் எதிரிகளையே நோக்கி பாய்ந்தோடி வீர தாக்குதல் நடத்திய, நம் தலைமுறையை சேர்ந்த கேப்டன் மனோஜ் குமார் பாண்டேவை பற்றித் தான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.
 | 

கார்க்கில் ஹீரோ கேப்டன் மனோஜ் குமார் பாண்டே!

வெள்ளையர்களிடம் இருந்து நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தர போராடிய பல தலைவர்களை பற்றி நாம் கேள்வி பட்டிருக்கிறோம். நாட்டிற்காக தங்கள் உயிரை துட்சமாக நினைத்து போராடியவர்களின் பட்டியல் 1947-உடன் நின்றுவிடவில்லை. தனக்கு முன் 100 துப்பாக்கிகள் இருப்பதை அறிந்தும் கூட சற்றும் யோசிக்காமல் எதிரிகளையே நோக்கி பாய்ந்தோடி வீர தாக்குதல் நடத்திய, நம் தலைமுறையை சேர்ந்த கேப்டன் மனோஜ் குமார் பாண்டேவை பற்றித் தான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம். 

கார்க்கில் போரின் போது வெறும் 24 வயதேயான மனோஜ் குமார் பாண்டே 1/11 கோர்க்கா ரைபிள் பிரிவில் சேர்ந்தார். ராணுவ நேர்க்கானலில், ஏன் நீங்கள் ராணுவத்தில் சேர விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு, பரம் வீர சக்ரா விருதை பெற வேண்டும் என சற்றும் யோசிக்காமல் கூறினாராம். 

1999ம் ஆண்டு, பாகிஸ்தான் ராணுவத்தினர் கார்க்கில் வரை ஊடுருவியதை தொடர்ந்து, இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் விஜய் என்ற பதில் தாக்குதலில் கேப்டன் மனோஜ் பல அதிரடி தாக்குதல்களுக்கு தலைமை வகித்தார். பட்டலிக் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பங்கர்கள் அமைத்து இந்திய ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். அந்த பகுதியை கைப்பற்றும் கடினமான பொறுப்பு கேப்டன் மனோஜ் மற்றும் அவரது படைக்கு வழங்கப்பட்டது.

ஜுபர் ஹில்ஸ் என்ற மலையில் பாகிஸ்தான் ராணுவம் பங்கர்களை அமைத்திருந்தது. அந்த மலையில் இருந்து இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை எளிதாக அறிந்துகொள்ள முடியும் என்பதால், அது எதிரிகளுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்தது. அந்த மலையை கைப்பற்ற தனது படையுடன் சென்றார் கேப்டன் பாண்டே. ஆனால், மோசமான ஒரு பாதையை கடந்து தான், பங்கர்களை நெருங்க முடியும். இரண்டு குழுக்களாக இந்த தாக்குதலை நடத்த கேப்டன் பாண்டே திட்டமிட்டுள்ளார். தனது படையினரை இடதுபுறம் செல்ல உத்தரவிட்டு, இவர் வலதுபக்கமாக சென்று தாக்குதல் நடத்த இருந்தார்.

ஆனால், எதிரிகள் அவர்களை கண்டுவிட்டனர். இருந்தாலும், சற்றும் யோசிக்காமல், எதிரிகளை சுட்டபடியே அங்கிருந்து பாய்ந்தோடினார் பாண்டே. எதிரிகள் சுட்டதில் தன் மீது குண்டுகள் பாய்ந்தைக் கூட பொருட்படுத்தாமல் எதிரிகளை கையால் வீழ்த்தியே முதல் பங்கரை கைப்பற்றினார். கேப்டன் வீரமாக செல்வதை பார்த்த மற்ற வீரர்களும் அவரை தொடர்ந்து சென்றனர். இரண்டாவது பங்கர், மூன்றாவது பங்கர் என தனது படையுடன் கைப்பற்றினார். கடைசி பங்கரை கையெறி குண்டை வைத்து தகர்த்தார். அப்போது அவரது தலையில் பாய்ந்த குண்டு அவரது உயிரை பிரித்தது. 

கேப்டன் மனோஜ் குமார் பாண்டேவின் ஆசைப்படியே அவரது சாதனைகளை அவருக்கு பரம் வீர சக்ரா விருது வழங்கப்பட்டது. அவரது தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக காஷ்மீரின் டிராஸ் பகுதியில் உள்ள கார்க்கில் நினைவகத்தில், கேப்டன் மனோஜ் குமார் பாண்டேவுக்கு என ஒரு தனி கட்டிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அஜய் தேவ்கன் நடிப்பில் கேப்டன் மனோஜின் சாதனைகளை மையப்படுத்தி ஒரு பாலிவுட் திரைப்படம் உருவாக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவை பாதுகாத்த, பாதுகாக்கும் ஒவ்வொரு உண்மையான வீரருக்கும் இன்றைய தினத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP