காந்தியின் கடைசி வார்த்தை ஹேராம் தானா? - காந்தியின் செயலர் கல்யாணம் பேட்டி!

அந்த அடுக்கு மாடி வீடு தேனாம்பேட்டையின் முக்கிய இடத்தில் உள்ளது.
 | 

காந்தியின் கடைசி வார்த்தை ஹேராம் தானா? - காந்தியின் செயலர் கல்யாணம் பேட்டி!

அந்த அடுக்கு மாடி வீடு தேனாம்பேட்டையின் முக்கிய இடத்தில் உள்ளது. பச்சைப் பசேலென செடி கொடிகள், தொட்டி தாவரங்கள் தரை தளத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இதை பராமரிக்கவே தனியாக ஒரு ஆள் வேண்டுமென மனதிற்குள் நினைத்துக் கொண்டு, மேலே போனால் இரண்டாவது தளத்தில் கதர் ஜிப்பா அணிந்துக் கொண்டு இந்தக் கால அரசியல் நிலவரங்களை பிச்சு உதறுகிறார் ஒரு முதியவர். அவர் தான் வி.கல்யாணம், தேசத் தந்தை காந்தியின் தனிச் செயலராக இருந்தவர். இந்த சுதந்திர தினத்தில் தனது 97-ம் வயதில் காலடி எடுத்து வைக்கிறார். 

வீட்டில் அவர் மட்டும் தனியாக வசிக்கிறார். காலை 4 மணிக்கு எழுந்து தரை தளத்திற்கு படிக்கட்டு வழியாக இறங்கி (லிஃப்ட்டைப் பயன்படுத்தாமல்), செடிகள் இருக்கும் இடத்தை கூட்டிப் பெருக்கி, அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சுகிறார். அதோடு வீட்டின் மொட்டை மாடியில், வெண்டை, தக்காளி, முருங்கை, கத்தரி, கீரை போன்ற தனக்கான உணவையும் பயிரிட்டு, தானே சமைத்தும் சாப்பிடுகிறார். ஒரு மழை நேர மாலை வேளையில் அவரை சந்தித்தோம். 

காந்தியின் கடைசி வார்த்தை ஹேராம் தானா? - காந்தியின் செயலர் கல்யாணம் பேட்டி!

(படம் - தோட்டத்தின் ஒரு பகுதி) 

"நான் பிறந்தது சிம்லாவுல, ஆனா எங்க பூர்வீகம் தஞ்சாவூர். காந்தி 1948-ல் இறந்ததுக்கு அப்புறம், 1956-ல தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான கமிஷனரா சென்னைக்கு வந்தேன்" என்றவர் காந்தியைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார். 

"இந்தியாவுல 7 லட்சம் கிராமங்கள் இருக்கு. அவங்களுக்கு சாலை, பேருந்து, தண்ணீர், பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவமனை போன்ற வசதிகள் கிடைக்கணும்ன்னு காந்தி விரும்புனார். ஆனா நான் மேல சொன்ன எல்லாமே அப்போ இந்தியாவுல இருந்தது. எங்க தெரியுமா? மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை மாதிரியான பெரு நகரங்கள்ல தான் இருந்தது. 

காந்தியோட அப்பா குஜராத்ல இருக்க காத்தியவாட்ல ப்ரைம் மினிஸ்டரா இருந்தாரு. அந்தக் காலத்துல ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கு திவான்னு சொல்லக் கூடிய இந்த ப்ரைம் மினிஸ்டர்கள் இருப்பாங்க. இப்படி பெரிய குடும்பத்தில் பிறந்தவர் நெனச்சிருந்தா வசதியா இருந்திருக்கலாம். 18 வயசுல சட்டம் படிக்க லண்டனுக்குப் போனார். அவருக்கு இந்துத்துவத்தப் பத்தியெல்லாம் ஒண்ணுமே தெரியாது. அங்க போய் தான் ராமாயணம், மகாபாரதத்தை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டார். 

காந்தியின் கடைசி வார்த்தை ஹேராம் தானா? - காந்தியின் செயலர் கல்யாணம் பேட்டி!

படிச்சி முடிச்சதும் லா பிராக்டீஸ் பண்ண தென்னாப்பிரிக்காவுக்கு வந்தார். அங்க வெள்ளைக்காரன் தான் ராஜ்ஜியம் பண்ணிட்டு இருந்தான். எல்லா விஷயங்கள்லயும் அவங்களுக்குன்னு ஒரு வித சொகுசு இருந்துச்சி. ஆனா வெள்ளைக்காரங்கள தவிர்த்து மத்தவங்களுக்கு அடிப்படை வசதி கூட இல்ல, தவிர இன பாகுபாடு தலைதூக்கி இருந்துச்சி. அது தான் காந்தியை நாட்டுக்காகப் போராட தூண்டுச்சி. அப்போ தொடங்கி வாழ்க்கையோட கடைசி நிமிஷம் வரைக்கும் எல்லாத்தையும் தியாகம் பண்ணினார். 

ஆனா வெள்ளைக்காரங்க நகரத்தை மேம்படுத்துனாங்க. இன்னும் கொஞ்ச நாள் சுதந்திரம் கிடைக்காம தள்ளிப் போயிருந்தா கிராமங்களும் முன்னேறியிருக்கும். சுதந்திரம் கிடைச்சதுக்கப்புறம் 'பாடு பட்டதெல்லாம் வேஸ்ட்ன்னு' அவரே சொன்னார். 

காந்தியின் கடைசி வார்த்தை ஹேராம் தானா? - காந்தியின் செயலர் கல்யாணம் பேட்டி!

ஒரு விதத்துல கோட்ஷே அவர சுட்டது கூட நல்லது தான். அந்த நேரத்துல காந்திக்கு பின்புறமா 6 இன்ச் இடைவெளில நான் நின்னுட்டு இருந்தேன். ஒரு வேள அவர் சாகாம உயிரோட இருந்திருந்தாருன்னா, இப்போ நடக்குற ஊழல் மிகுந்த அரசியல பாத்து மனம் வெதும்யிருப்பாரு. இதையெல்லாம் அவரால சகிச்சிக்கிட்டு இருக்க முடியாது. நாட்டுக்காக கஷ்டப் பட்ட அவர், இந்த மாதிரியான துன்பங்கள அனுபவிக்காம இருக்குறதே நல்லது. 

காந்தி வெள்ளைக்காரங்கக் கிட்ட இருந்து கத்துக்கிட்டதுல முக்கியமான விஷயம் தூய்மை. எப்போவும் நம்மளும் நம்மள சுத்தியிருக்க இடமும் சுத்தமா இருக்கணும்ன்னு அவர் விரும்புவாரு. அதைத்தான் நானும் இந்த நிமிஷம் வரைக்கும் ஃபாலோ பண்றேன். அதுக்குத் தனியா நிதி ஒதுக்கி, விளம்பரம் பண்ணனும்ன்னு தேவையில்லை. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வீட்டையும், சுற்றுபுரத்தையும் சுத்தமா வச்சிக்கிட்டாலே போதும். நான் இப்போதும் தினமும் 8 மணி நேரம் வேலை செய்யறேன். வெளில ரோட்டையும் சுத்தம் செய்யறேன். 

காந்தியின் கடைசி வார்த்தை ஹேராம் தானா? - காந்தியின் செயலர் கல்யாணம் பேட்டி!

சபர்மதி ஆஸ்ரமத்தில இருக்கும் போது காந்தி தினம் 3.30-க்கு எழுந்திருப்பாரு. பிரேயர் நடக்கும், அதுல யாராச்சும் கலந்துக்கலன்னா, கோபப் பட மாட்டாரு. ஏன்னா கோபம் வன்முறை. அதனால வீட்டுக்குப் போயிருப்பான்னு அமைதியா சொல்வாரு. அப்புறம் நடைப் பயிற்சி பண்ணுவாரு. டீ, காபி எல்லாம் கிடையாது. வெந்நீர்ல எலுமிச்சையும் தேனும் கலந்து குடிப்பாரு. குளிச்சதுக்கு அப்புறம் சாப்பாடு. ஏழை என்ன சாப்பிடுவானோ, அதைதான் அவரும் சாப்பிடுவாரு. காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ், கிழங்கு எல்லாம் விலை அதிகம், அதனால ஏழைங்க சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்கு ஏதுவானது பூசணிக்காயை வேக வச்சி சாப்பிடுறது தான். அதைத் தான் காந்தியும் பண்ணுவாரு. தொடர்ந்து 35 வருஷம், சாகுற வரைக்கும் இது தான் அவருடைய உணவு.

நான் அவருக்கு செகரெட்டரியா இருந்தேன். அவர் சொல்றதையெல்லாம் பண்ணனும். அவர் செலவு அதிகம் பண்ண மாட்டாரு. எல்லாத்துலயும் சிக்கனத்தை ஃபாலோ பண்ணுவாரு. உதாரணமா, இவருக்கு லெட்டர் போடுறவங்களுக்கு, அந்த கடித்தத்தோட பின் பக்கத்துலயே பதில் எழுதுவார். திங்கட்கிழமை காலை 6 மணில இருந்து மாலை 6 மணி வரைக்கும் மெளன விரதம் இருப்பாரு. அன்னிக்கு முழுக்க, அவருக்குத் தேவையானத ஒரு சீட்டுல எழுதி என் கிட்ட காண்பிப்பாரு. அதுவும் அவர் சொல்ல வர்ற விஷயத்துக்கு ஏத்த மாதிரி சின்ன சின்ன சீட்டுல தான் எழுதுவாரு. அந்த நாள் முழுக்க எங்களோட தொடர்பு இப்படி சீட்டுல எழுதி படிக்கிறதா தான் இருக்கும். அன்னிக்கு மட்டும் அவரே லெட்டருக்கு பதில் எழுதுவாரு. மத்த நாள்ல அவர் சொல்ல, நான் டைப் பண்ணுவேன். 

சுதந்திரம் கிடைச்சப்போ அவர் கொல்கத்தாவுல இருந்தாரு. கூப்பிட்டாங்க, ஆனா இவர் வர மாட்டேன்னு சொல்லிட்டாரு. இந்து முஸ்லிம் ஒண்ணா இருக்குறது தான் என்னோட விருப்பம். ஆனா இப்போ நிலைமை தலைகீழா இருக்கு, அதனால எனக்கு இப்போ சுதந்திரம் மகிழ்ச்சியா இல்லை. நான் வரலன்னு சொல்லிட்டாரு. 

காந்தியின் கடைசி வார்த்தை ஹேராம் தானா? - காந்தியின் செயலர் கல்யாணம் பேட்டி!

அவருக்கு 4 பிள்ளைகள். முதல் மகன் ஹரிலால் காந்திக்கு குடிப்பழக்கம், சிகரெட் பழக்கம் இருந்ததால் வீட்டை விட்டு துரத்திட்டாரு. ரெண்டாவது மணிலால் காந்தி ஆப்பிரிக்காவுலேயே செட்டில் ஆகிட்டாரு. இப்போவும் அவருடைய குடும்பம் அங்க தான் இருக்கு. மூணாவது ராம்தாஸ் காந்தி டாடா ஆயில் கம்பெனில வேலை பாத்தாரு. அவர் தான் காந்திக்கு இறுதி சடங்கு செஞ்சாரு. நாலாவது தேவதாஸ் காந்தி, ராஜாஜியோட பொண்ண தான் இவர் கல்யாணம் பண்ணியிருக்காரு. இவருடைய பிள்ளை தான் பீகார் மற்றும் மேற்கு வங்க கவர்னரா இருந்த கோபால கிருஷ்ண காந்தி.  

ஆனா ஒரு பிள்லையையும் காந்தி படிக்க வைக்கல. ஏழையோட பிள்ளைக்கு படிக்க வசதியில்ல, அதனால என் பிள்ளைகளுக்கும் படிப்பு வேணாம்ன்னு விட்டுட்டாரு. அவங்களே வீட்ல படிச்சிக்கிட்டாங்க. சுத்தம், நேரம் தவறாமை, வீட்டுத் தோட்டம் எல்லாம் வெள்ளைக்காரன் கிட்ட இருந்து கத்துக்கணும்" என்றவரிடம் சுடப் பட்டதும் அவர் சொன்ன 'ஹேராம்' பற்றி கேட்டோம், 

"6 இன்ச் இடைவெளில நின்னுட்டு இருந்த என் காதுல அது கேக்கல. அதை விட பக்கத்துல யாரும் நிக்கல. ஆனா அவர் சொல்லிருக்க வாய்ப்பில்ல. ஒருத்தர் சுடும்போது அன்னிச்சையா நான் 'ஹே'ன்னு கத்துவோம், 'ஐயோ, அம்மா' இப்படி சில வார்த்தைகளும் இருக்கு. அவருக்கு முஸ்லீம்களை ரொம்பப் பிடிக்கும் ஹேராம்ன்னு சொன்னவரு, ஹேரஹீம்ன்னு சொல்லிருக்கலாம் இல்லையா?" என்கிறார் இந்த 97 வயது இளைஞர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP