தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது ஏன்?

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என, சாஸ்திரத்தில் ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது.
 | 

"ஸ்மிருதி கவுஸ்" என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது. 
"துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோ ஷே பூத தர்ஸ்யோ:
உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்"

என்ற இந்த ஸ்லோகத்தில்,‘துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, "உல்கா' எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது. அதாவது, மத்தாப்பு கொளுத்த வேண்டும். 

இதில் வரும் "பூத' என்ற வார்த்தை, சதுர்த்தசியைக் குறிக்கும். அதாவது, நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி. 'தர்சம்' என்ற வார்த்தை "அமாவாசை'யைக் குறிக்கும்.

 இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம். காரணம் என்ன? "பித்ரூணாம்' என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது. பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி,சொர்க்கம் நோக்கிமுன்னேறிச் செல்வார்கள். 

அதனால், பட்டாசை விரும்பாதவர்கள் கூட,  நம் முன்னோருக்காக,
கண்டிப்பாக மத்தாப்பாவது  கொளுத்த வேண்டும்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP