Logo

தமிழ் சினிமாவின் செம்ம அம்மாக்கள்!!

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே...அம்மாவை வணங்காது உயர்வில்லையே...நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறு ஏது" என்று கவிஞர் வாலி பாட்டெழுதி இருப்பார். தாயை விட சிறந்த கோவில் இல்லை என்பது உண்மை தானே! நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் தான் அம்மாக்கள். அவர்களை போற்ற வருடத்திற்கு ஒரு நாள் போதாது எனினும், அன்னையர் தினத்தை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டரில் சாதனை பாச அம்மாக்களை பற்றி இங்கு காண்போம்.
 | 

தமிழ் சினிமாவின் செம்ம அம்மாக்கள்!!

தமிழ் சினிமாவின் செம்ம அம்மாக்கள்!!

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே...அம்மாவை வணங்காது உயர்வில்லையே...நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறு ஏது" என்று கவிஞர் வாலி பாட்டெழுதி இருப்பார்.  தாயை விட சிறந்த கோவில் இல்லை என்பது உண்மை தானே! நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் தான் அம்மாக்கள். அவர்களை போற்ற வருடத்திற்கு ஒரு நாள் போதாது எனினும்,  அன்னையர் தினத்தை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டரில் சாதனை பாச அம்மாக்களை பற்றி இங்கு காண்போம். 

 ஸ்ரீவித்யா: 

தமிழ் சினிமாவின் செம்ம அம்மாக்கள்!!தென்னிந்திய சினிமா உலகில் புகழ்பெற்ற, அழகான அம்மா  ஸ்ரீவித்யா என்றால் அது மிகையாகாது. பிரபல கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகளான இவர், 1970 ல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அப்போதைய டாப் ஹீரோக்களின் ஃபேவரிட் ஹீரோயினாக வளம் வந்தவர். 1975ம் ஆண்டு வெளிவந்த  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் படமான 'அபூர்வராகங்கள்' படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ஸ்ரீவித்யா, 1991 ல் வெளிவந்து சக்கைபோடு போட்ட 'தளபதி' படத்தில் அதே ரஜினிக்கு  அம்மாவாக நடித்து அப்பலாஸ் வாங்கி அன்றைய இளசுகள் மற்றும் தாய்மார்கள் மனதில் தனக்கென ஒரு முத்திரை பதித்தார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் அம்மா கேரக்டரில் நடித்தாலும், 1997 ல் பாசில் இயக்கத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை படத்தில், இளைய தளபதி விஜய்க்கு அம்மாவாக நடித்ததில் சென்சூரி அடித்தார் என்றே சொல்லலாம். தங்களுக்கு இது போல் ஃப்ரெண்ட்லி அம்மா இல்லையே! ச்ச நமக்கும் இப்படி ஒரு அம்மா இருந்தா சூப்பரா இருக்கும் என்று அன்றைய இளவட்டங்களை அம்மா பாசத்தில் கட்டிப்போட்டவர் என்றால் அது ஸ்ரீ வித்யா மட்டுமே. தொடர்ந்து 2000 -ம் ஆண்டு வரை பல்வேறு படங்களில் நடித்த இந்த அழகு மங்கை 2006 ம் ஆண்டு மறைந்தார்.

நதியா: 

தமிழ் சினிமாவின் செம்ம அம்மாக்கள்!!

என்றுமே இளமை மாறாமல், இன்றும் அதே அழகோடு ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நதியா. 1985ல் இயக்குனர் பாசிலால் 'பூவே பூச்சூடவா' படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட நதியாவிற்கு ரசிகர்களை விட  ரசிகைகளின் எண்ணிக்கை அதிகம். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை, நதியா பெண்கள் சைக்கிள், நதியா கொண்டை இப்படி அடக்கி கொண்டே போகலாம். பின்னர் இவர் திருமணம் செய்து கொண்டு கணவரோடு வெளிநாட்டில்  செட்டில் ஆகினார்.


2004 ம் ஆண்டு இயக்குனர் எம் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி' படத்தில் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்து அப்படத்தின் ஹாட்ரிக் வெற்றிக்கு முழு காரணமாக இருந்தவர் நதியா. இப்படத்தில் வரும் அம்மா(நதியா) மகன்(ரவி) பாசத்தை கண்ட, கணவன் இல்லாமல் மகனை வளர்க்கும் தாய்மார்கள், தங்களை நதியாவாகவும், தங்கள் மகன்களை ஜெயம் ரவியாகவும் நினைத்து கொள்ளும் அளவிற்கு நடிப்பில் சென்டம் எடுத்திருப்பார் நதியா.  

சரண்யா பொன்வண்ணன்:

தமிழ் சினிமாவின் செம்ம அம்மாக்கள்!!

இப்போது உள்ள தமிழ் சினிமாவில், அம்மா என்றாலே சரண்யா பொன்வண்ணன் தான் என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு படங்களில் நடித்து, தன் எதார்த்த நடிப்பால் பல்வேறு அவார்ட்களை குவித்து கொண்டு இருக்கும் கலகலப்பு அம்மா இவர்.

தனது முதல் படமான 1987-ல் வெளிவந்த 'நாயகன்' படத்தில் உலக நாயகனுக்கு ஜோடி போட்டாலும், கதாநாயகியாக ஜொலிக்காத இவர்,  நீண்ட இடைவேளைக்கு பின்னர் அம்மா வேடத்தில் நடிக்க தொடங்கி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறார்.     

ராம், தவமாய் தவமிருந்து,எம்டன் மகன் மற்றும் களவாணி போன்ற படங்களில் இவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது.  2010ஆம் ஆண்டுக்கான இந்தியத் தேசியத் திரைபட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை 'தென்மேற்குப் பருவக்காற்று' என்ற திரைப்படத்திற்காக இவர்  பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரக்டருடன் ஒன்றி போவதால் பல்வேறு இயக்குனர்களின் ஃபர்ஸ்ட்  சாய்ஸ் இவர் தான்.

சிம்ரன்:

தமிழ் சினிமாவின் செம்ம அம்மாக்கள்!!

1990 - 2000 ஆண்டு வரை பல்வேறு இளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த பெருமை சிம்ரனையே சாரும்.  ஆளை கவிழ்க்கும் அழகு, அபார நடிப்பு, இளமை துள்ளம் இடை நடனம் என்று டாப் கீரில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் சிம்ரன். பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து கொண்டிருந்த நிலையில் 2002 -ல்  மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் 3 குழந்தைகளுக்கு தாயாக இவர் நடித்தது அப்போதைய சக ஹீரோயின்களுக்கு சவாலாக இருந்தது. இப்படத்தில் நடித்ததிற்காக இவர் பல்வேறு அவார்ட்களை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக 'நேருக்கு நேர்' படத்தில் நடித்த சிம்ரன். 2008 ம் ஆண்டு வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தில் இரு சூர்யாவில் ஒருவருக்கு ஜோடியாகவும், இன்னொருவருக்கு தாயாகவும் நடித்து நடிப்பில் அசத்தி செம்ம அம்மாவாக இருந்தார். 

ராதிகா:

தமிழ் சினிமாவின் செம்ம அம்மாக்கள்!!               

திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர், ராடன் மீடியா நிறுவனத்தின் நிறுவனர் என பன்முகங்களை கொண்டவர் ராதிகா. 70களில் இவர் சிறந்த கதாநாயகியாக இருந்தாலும் குண சித்திரை நடிகையாக இவரின் கொடி மேலோங்கி நிற்கிறது. அம்மா கேரக்டர்களில் இவரது அசால்டான நடிப்பு அனைத்து தரப்பினரையும் அள்ளும். 

குறிப்பாக: ரோஜா கூட்டம், தெறி, நானும் ரவுடி தான் போன்ற படங்களில் இவரது அசாத்திய நடிப்பு அனைவரையும் தெறிக்கவிட்டது. 

ரம்யா கிருஷ்ணன்:

தமிழ் சினிமாவின் செம்ம அம்மாக்கள்!!அபார நடிப்பு, கம்பீரமான தோற்றம் மற்றும் குரலுக்கு, சொந்த காரரான ராஜ மாதாவை இந்த அழகு அம்மா லிஸ்டில் மிஸ் பண்ண முடியுமா? அவளோ தான் அவரது ரசிகர்கள். பாகுபலியில் ' இதுவே என் கட்டளை.. என் கட்டளையே சாசனம்' என்று அவர் கர்ஜித்தது இன்னும் நம் காதுகளை விட்டு நீங்கவில்லை. இப்படி ஒரு அதிகார வேடத்தில் நடிக்கும்  இந்த அம்மணியால் மட்டுமே அதற்கு அப்படியே எதிரான கலகலப்பான கேரக்டரில் நடிக்கவும்  முடியும். அதற்கு சான்று 'ஆம்பள' திரைப்படம்.

கதாநாயகர்களுக்கு அம்மாவாகவும், அதே சமயம் கவர்ச்சி துள்ளம் நாட்டியங்களும் ஆடி பார்ப்பவர்களை கிறங்கடிக்க செய்வதில் இவருக்கு நிகர் இவரே.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP