ஜெர்சியில் அம்மா பெயரோடு விளையாடிய தோனி டீம் நினைவிருக்கிறதா?

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினத்தை கோடான கோடி மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு பிள்ளையும், இந்த நாளில் தங்களின் தாயை வெவ்வேறு விதமாக கொண்டாடியும், வாழ்த்துக்களை தெரிவித்தும், அன்பளிப்புகளை பகிர்ந்தும் வருகின்றனர்.
 | 

அம்மாக்களை கௌரவிக்கும் விதமாக நாம் பார்த்த பல வித்தியாசமான கொண்டாட்டங்களில் மறக்க முடியாத ஒன்று, தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், தங்களின் அம்மாக்களுக்காக செய்த மரியாதைதான். அது அன்னையர் தினத்தை முன்னிட்டு செய்தது இல்லை, என்பது கூடுதல் ஸ்பெஷல். 

2016ம் ஆண்டு, இந்தியா நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. தீபாவளி பண்டிகை அன்று நடைபெற்ற இந்த முக்கிய போட்டியில், இந்திய வீரர்கள் ஒரு வித்தியாசத்தை கொண்டு வந்தனர். ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சி சேனலுடன் சேர்ந்து திட்டமிட்டு, விளையாடும் போது அணியும் ஜெர்சியில் தாயின் பெயரை பொறிக்க முடிவெடுத்தனர். 

எப்போதுமே, தங்களது பெயர், தந்தையின் பெயர், அல்லது குடும்பப் பெயரை ஜெர்சியில் பயன்படுத்தும் வீரர்கள், அன்று மட்டும் தங்களது தாயின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து வந்தனர். மகேந்திர சிங் தோனி தலைமையில், கோலி, ரஹானே, உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் இதை பின்பற்றினர். 

அன்று இந்த நடவடிக்கை குறித்து பேசிய தோனி, "இது அம்மக்களை கௌரவிக்கும் ஒரு முயற்சி. என்னை பொறுத்தவரை, அம்மாவுடன் எனக்கு இருந்த அன்பு தான் மிக பெரியது. அப்பாக்கள் இருப்பதில்லை என்று நான் சொல்லவில்லை. அவர்களும் உண்டு, ஆனால், அம்மாக்களின் பாசத்தை நாம் பாராட்டுவதே இல்லை. 

எல்லா இந்தியர்களுக்கும் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். எல்லையில் நமக்காக போராடும் ராணுவ வீரர்களை, சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் மட்டும் போற்றினால் போதாது. தினம் காலை எழுந்தவுடன் நம்மை பாதுகாக்கும் அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அதே போல தான் அம்மக்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்" என்றார் தோனி.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP