Logo

புத்தியை தீட்டுவோம் !

புத்தியை தீட்டுவோம் !
 | 

புத்தியை தீட்டுவோம் !

புத்தியை தீட்டுவோம் !

வாழ்க்கையில் வேகமாக சாதிக்க விரும்பிய இளைஞன் ஒருவன்,  ஜென் குருவை தேடிச் சென்றான் . குருவைப் பார்த்து , “ நான் குங்க்ஃபூ-கராத்தே கற்க விரும்புகிறேன். எனக்கு இவற்றைக் கற்றுக்கொள்ள எவ்வளவு காலம் பிடிக்கும்? ” என்றான் இளைஞன். குரு அமைதியாக“பத்து ஆண்டுகள்” என்கிறார்.இந்த பதில் இளைஞனுக்கு திருப்தி தரவில்லை. 

மீண்டும்  “இடை விடாது கற்பேன். பசி, தூக்கம் இன்றி; நாள் முழுவதும் கற்பேன். இப்போது சொல்லுங்கள்.எவ்வளவு நாளில் கற்றுக்கொள்ள முடியும் ” என்றான்.இந்த கேள்விக்கு  குரு ,“இருபது ஆண்டுகள்” என்று பதிலளித்தார்.வேகமாக கற்றுக்கொள்ள  விரும்பிய இளைஞனுக்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்தது. 

அடுத்த சில நாட்களிள் மீண்டும் குருவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது , குரு  தனது மற்றொரு சீடனிடம் கதை ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தார்.

“ மரம் வெட்டும் தொழிலாளிகள்; அவர்களில் புதிதாக ஒருவன். புதியவன் அதிகம் சம்பாதித்தான். இரண்டு மடங்கு மரம்  வெட்டினான். மற்றவர்களுக்கு இது ஆச்சரியம். எப்படி உன்னால் மட்டும் இது முடிகிறது?’ என்று புதிய மரம் வெட்டியிடம் கேட்டார்கள்.

புதிய மரம் வெட்டி  “ஒவ்வொரு முறையும் மரம் வெட்டிய பிறகு, கோடாலியை தீட்டுவிட்டு அடுத்த மரம் வெட்டுகிறேன்” என்றான்.

குரு , வேகமாக வெற்றி பெற தேடி வந்த இளைஞனைப் பார்த்து , “ கற்பதற்கு கால அளவு கேட்டதில் தவறில்லை. கற்பது என்பது கற்று முடிப்பதல்ல . கற்றதை தீட்டி கூர்மையாக்குவதே முழுமையான கற்றல்.” என்றார். நம்மில் பலர் பலவிதமான பட்டங்களை பெற்று விடுகிறோம். அதில் பெருமிதமும் கொள்கிறோம். கற்றல் நமது புத்தியை தீட்டி செயலாக மாற்றுவதில் தான் நிறைவு பெறுகிறது. இந்த அடிப்படையை உணர்ந்து  கொண்டால் இந்த நாள் இனிய நாளே...


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP