Logo

தீபாவளி நாளின் சிறப்புகள்!

மேற்கு வங்கத்தில் காளிபூஜை நடைபெறும். தீபாவளியை இந்த மாநிலத்தில்,மகா நிசா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். காளியின் உக்கிரத்தை சங்கரன் தணித்த நாளாக. தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
 | 

தீபாவளி நாளின் சிறப்புகள்!

கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை காத்த நாள் தீபாவளி என்று நமக்குத் தெரியும். இது தவிர பிறபல சிறப்புகள் உள்ளன அவை:

* ஆதிசங்கரர் ஞானபீடத்தை நிறுவிய நாள்.
* மாவலிச் சக்கரவர்த்தி முடிசூடிய நாள்.
* புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற நாள்.
* சமண மத மகாவீரர் நிர்வாணம் அடைந்ததும் வீடு பேறும் அடைந்த தினம்.
* குருகோவிந்த்சிங், சீக்கியமத அமைப்பான 'கல்சா'வை அமைத்த தினம்.
* சாவித்திரி யமனிடம் வாதிட்டு சத்தியவான் உயிரை மீட்டநாள்.
* நசிகேதன் யமனுலகுக்குச் சென்று வரம் பெற்று திரும்பிய நாள்.
* கோவர்த்தன பூஜை செய்யும் நாள்.
 * வங்காளத்தில் காளி பூஜை செய்யும் நாள்.
 * ராமர் சீதையை ராவணனிடமிருந்து மீட்டு அயோத்தி திரும்பிய நாள். . 
* ராஜஸ்தானில், பெண்கள் உடல்  முழுவதும் எனாமல் நகைகள் அணிந்து, வண்ண ஆடைகள் உடுத்தி, நடனம் ஆடி மகிழ்வர். தீபாவளியன்று ராமரை வழிபடுவது ராஜபுத்திரர்களின் வழக்கம். 
* மத்திய பிரதேசத்தில் குபேர பூஜை நடைபெறும். குபேரனை வழிபட்டால், பணத்தட்டுப்பாடு வராது என்பது அந்த மாநில மக்களின் நம்பிக்கை. 
* மேற்கு வங்கத்தில் காளிபூஜை நடைபெறும். தீபாவளியை இந்த மாநிலத்தில்,மகா நிசா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். காளியின் உக்கிரத்தை சங்கரன் தணித்த நாளாக. தீபாவளியை கொண்டாடுகின்றனர்.  * ஹிமாச்சல பிரதேசத்தில் பக்களை அலங்கரித்து வழிபடுவர். 
* ஜைனர்கள் தீபாவளி நன்னாளை மகாவீரர் வீடு பேறு அடைந்த நாளாகத் கொண்டாடுகின்றனர். 
* சீக்கியர்கள் சீக்கிய மதகுரு, குருநானக் பூத உடல் நீத்து,புகழுடம்பு எய்திய நாளாக கொண்டாடுகின்றனர். 
* சீனாவில் ஹீம்-ஹூபா மியான்மரில் தாங்கிஜீ, தாய்லாந்தில் லாய்கிரதோஸ் ஸ்வீடனில் லூசியா ஆகிய விழாக்கள், நமது நாட்டு தீபாவளியை போலவே, விளக்குகளை வரிசையாக வைத்துக் கொண்டாடுகின்றனர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP