Logo

கூகுள் பயன்படுத்துவோரை கண்காணிக்கும் மோசடி கும்பல்.. 

மக்களுடன் சேர்ந்து டெக்னாலஜியும், மக்களை விட வேகமாக வளர்ந்து வரும் இவ்வுலகில், இன்டர்நெட் என்றதும், நம் அனைவரின் மனதிலும் பட்டென படர்வது, கூகுள் க்ரோமின் திரை. என்ன வேண்டுமானாலும் தேடலாம், எதை பற்றியும் கேட்கலாம். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, நம்மளவு இதை உபயோகிப்பாரா என்பது சந்தேகமே. காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நமது இணைப்பிரியா இணைப்பாகி விட்டது கூகுள்.
 | 

இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவிடும் நமக்கு, அதன் அச்சுறுத்தல்கள் தெரிவதும் இல்லை, தெரிந்தாலும் நமக்கு ஏற்படும் வரை அவற்றை நாம் பெரிது படுத்துவதும் இல்லை. ஆனால் இப்போது கூகுள் க்ரோமில் நடக்கும்  ஏமாற்று வேலைகள்  பயமுறுத்தும் வகையிலேயே உள்ளன.

பொதுவாக சேவை மையங்களின் தொலைபேசி எண்களை நாம் கூகுளில் தேடுவதுண்டு. ஸ்விக்கியின் நம்பர், வங்கிகளின் நம்பர் என அனைத்தும் கூகுள் க்ரோமிலிருந்து கிடைக்கப்பெறும். அவசரமாக நம்பர் தேவைப்படும் நேரத்தில், அதில் கேட்கப்படும், கூறப்படும், என அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்து, ஒரு வழியாக நம்பர் கிடைத்தது என்ற நிம்மதியில் நாம் நம் வேலையைப் பார்க்க சென்று விடுவோம். 

ஆனால், நம்மையே கண்காணித்து வரும் ஒருவர், நம் அனைத்து தகவல்களையும் எடுத்திருப்பார். இது எப்படி சாத்தியம், நான் வங்கியின் நம்பர் தானே எடுத்தேன் என்கிறீர்களா? அது தான் டெக்னிக். இது போன்ற சம்பவங்கள் புதிதில்லை எனினும், கூகுளில் இது நடந்திருப்பது இதுவே முதல் முறை. ஒரு பெண்மணி ஸ்விக்கியின் சேவை மையத்தை அணுக முயற்சித்து, ரூ.95,000 தொலைத்திருக்கிறார்.

கூகுள் தனது பயனாளர்களுக்கு உதவும் வகையில், நம்பர் எடிட் செய்யும் ஆப்ஷன்கள் தருவதால், இதை பயன்படுத்தி, மோசடிக்காரர்கள், சேவை மையங்களின் நம்பர்களை மாற்றி, ஏதேனும் ஒரு ஆப் - பை டவுன்லோட் செய்யக்கூறியோ அல்லது ஏதேனும் லிங்க் - கை க்ளிக் செய்யும்படியோ கூறி, அதன் மூலம்  நம் அனைத்து விவரங்களையும் (வங்கி விவரம் உட்பட) எடுத்து விடுகின்றனர். நாமும் நடப்பது தெரியாமல் எல்லாவற்றிற்கும் சம்மதம் தெரிவித்து, ஆப் - பை டவுன்லோட் செய்து, லிங்க் - கை க்ளிக் செய்து, நமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்கிறோம். கூகுள் குரோம் வழியாகச் சென்று யூபிஐ – ஆப்பை பயன்படுத்தத் தொடங்கினால், அதிலுள்ள, "ரிக்வஸ்ட் " என்ற ஆப்ஷன் மூலமாகவும் மோசடி நடத்தத் தொடங்கி விட்டனர்.

ஆனால் ஒன்று, கூகுளுக்கும், இந்த மோசடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனிமேல், சேவை மையங்களின் நம்பர்களை, சம்ந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலிருந்து பெறுவதே, இது போன்ற ஆபத்துகள் எதிலும் சிக்கிக் கொள்ளாமல் நம்மைக் காத்துக்கொள்ள உதவும்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP