கனவு மெய்ப்பட - எதுவாக மாறவேண்டும்?

கனவு மெய்ப்பட - எதுவாக மாறவேண்டும்?
 | 

கனவு மெய்ப்பட - எதுவாக மாறவேண்டும்?

கனவு மெய்ப்பட - எதுவாக மாறவேண்டும்?

தியானம் கலைந்து கண்விழித்து பார்த்தார் ஞானி ஒருவர். அப்போது அவர் முன் வந்த ஒரு சுண்டெலி, எனக்கு ஒரு வரம் வேண்டும் என்றது. என்ன வரம் வேண்டும் என்றார் ஞானி .அதற்கு பதிலளித்த சுண்டெலி, பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், பயம் போய்விடும் என்றது. சரி அப்படியே ஆகட்டும் என்ற ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அந்த பூனை ஞானி முன் வந்து நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார்.

சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறி மீண்டும் சுண்டெலியாகமாற்றி விட்டார் ஞானி.

வெறும் கனவுகளுடனும் , ஆசைகளுடனும் இதுவாக மாறிவிட்டால் இன்பம் , அதுவாக மாறிவிட்டால் பெரும் மகிழ்ச்சி என்று பலர் பேசிக்கொண்டு காலத்தை கடத்தி வருகின்றனர்.

எதுவாக மாற விரும்புகிறோமோ அதற்கான மன உறுதி , மன அமைதி , ஊக்கம் , உழைப்பு இவற்றை தந்து விட்டால் கனவு மெய்ப்படும். வெற்றிகளை நிரந்தரமாக்கும். இந்த நாள் இனிய நாளாக அமைய நல் வாழ்த்துகள்.


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP