Logo

கடவுள் துணை இருப்பாரா?

கடவுள் துணை இருப்பாரா ?
 | 

கடவுள் துணை இருப்பாரா?

கடவுள் துணை இருப்பாரா?

குருகுலத்தில் சைதன்யர் புத்திசாலி மாணவர். அவரை ரான சைதன்யரை குரு நாதர் நாமதேவருக்கு மிகவும் பிடிக்கும். படிப்பு முடிந்ததும் நாமதேவர் அவரிடம் நீ புறப்படலாம் உன் பெற்றோருக்கு தொண்டு செய் கடவுள் துணை இருப்பார் என்று வாழ்த்தினார். சைதன்யர் அவரிடம் கடவுள் துணையிருப்பார் என்கிறீர்களே அது எப்படி சாத்தியம் ? எனக்கேட்டார். சைதன்யா , “உன்னுடைய சந்தேகத்திற்கு இன்னொரு நாள் விடை அளிக்கிறேன் இந்தப் பொருளை பவானிபுரத்தில் உள்ள என் சகோதரனிடம் ஒப்படைத்துவிட்டு வா” என்றார் நாமதேவர்.

சைதன்யரும் புறப்பட்டார். வழியில் தாகம் ஏற்பட தண்ணீர் தேடி அலைந்தார். வழியில் பார்வையற்ற ஒருவர் செடியிலுள்ள இலைகளை முகர்ந்து பறிப்பதைக் கண்டார். நான் மூலிகை சேகரிப்பவன் பார்வை இல்லாததால் பாம்புக்கடிக்கு மருந்தாகக் கூடிய மூலிகையை முகர்ந்து கண்டுபிடிக்கிறேன் என்ற பெரியவர் அவரிடம் சில இலைகளைக் கொடுத்தார். அதைப் பெற்ற சைதன்யர் ஐயா , குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்றார்.

அந்த முதியவர் அருகாமையில் இருக்கும் கிணறு ஒன்றுக்கு வழிகாட்டினார் . சைதன்யர் அங்கு சென்று தண்ணீர் குடித்தார். உணவை சாப்பிட்டு உறங்கினார். சற்று நேரத்தில் ஏதோ ஒன்று அவரை இடித்து விட்டு ஓடியது. கண் விழித்தபோது ஒரு முயல் ஓடுவதைக் கண்டார். அப்போது மரத்தில் சத்தத்துடன் கிளை முறிந்து விழ எழுந்து ஓடி தப்பித்தார். கொஞ்ச தூரம் சென்று அங்குள்ள ஒரு சத்திரத்தில் தங்கினார்.

திடீரென யாரோ அலறும் சத்தம் கேட்டு எழுந்தார். அங்கிருந்த ஒருவரை ஒரு பாம்பு தீண்டிவிட்டு ஓடியதை பார்த்தார். தன்னிடமிருந்த மூலிகையை பிழிந்து சாற்றை கடிபட்டவரின் வாயில் விட அவர் கண் விழித்தார். அவர் அந்த நாட்டு அரசர் , தன் உயிரைக் காப்பாற்றிய சைதன்யருக்கு நன்றி தெரிவித்த அவர் என்னை வந்து சந்திக்கவும் என்றார். நன்றி ஐயா விரைவில் சந்திக்கிறேன் என்று விடைபெற்றார் சைதன்யர்.

குருநாதரின் சகோதரரிடம் பொருளை ஒப்படைத்துவிட்டு திரும்பி குரு நாதரிடம் நடந்ததை விளக்கினார். கண்ணுக்கு தெரியாத கடவுள் எப்படி துணையிருப்பார் எனக் கேட்டாயே இப்போது நேரிலேயே பார்த்து விட்டாயே என்றார் குரு நாதர்.

புரியாமல் விழித்த சைதயன்யரிடம், குரு நாம தேவர் ,” கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். ஆனால் ஒரே உருவத்தில் வருவதில்லை. விஷக்கடிக்கு மூலிகை தந்த முதியவர், தாகம் தணிக்க காட்டில் கிணறு தோண்டியவர், மரக்கிளை ஒடிந்தபோது உன்னைக் காத்த முயல், பாம்புக் கடிக்கு மருந்திட்ட நீ என எல்லோரும் கடவுளின் வடிவங்கள் தான் என்றார்.

சைதன்யர் மனதிற்குள் கடவுளைக் கண்டேன் கடவுளைக் கண்டேன் என்று சொல்லி மகிழ்ந்தார். பிறகு காட்டில் தன்னால் காப்பாற்றப்பட்ட அரசரை சந்தித்தார். தனது உயிரை காப்பாற்றிய சைதன்யருக்கு பட்டம் சூட்டி பட்டத்து இளவரசாக அரசப் பதவியில் அமர்த்தி மகிழ்ந்தார் அரசர். கதையில் வருவதைப் போல அரச பதவி அனைவருக்கும் கிடைத்து விடப் போவதில்லை. கடமைகளை சரியாக , எதிர்ப்பார்ப்பில்லாமல் செய்து வந்தால் உரியது , சரியான நேரத்தில் நிச்சயம் கிடைக்கும் என்பதே கருத்து. இந்த கருத்துடன் இந்த நாளை இனிதாக்குவோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள http://www.newstm.in/

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP