தீபாவளியும், அறிவியலும்!

மழைக்காலத்தில், விஷ ஜந்துக்கள், வீட்டு தோட்டங்களிலும், வீட்டிற்கு அருகாமையிலும் இருந்தாலும், பட்டாசு சப்தத்தினால் அவை வெளியேறிவிடும். அவற்றால் நமக்கோ, நம்மால் அவைகளுக்கோ, பாதிப்பு ஏற்படாது. சபரிமலைக்கு காடு வழி பயணம் செய்யும்போது, வெடி வழிபாடு செய்வதற்கான காரணங்களில் இதும் ஒன்று.
 | 

தீபாவளியும், அறிவியலும்!

தீபாவளி பண்டிகையை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஆனால், இதிலும் மருத்துவம் கலந்த அறிவியல் காரணத்தை நம் முன்னோர்  புகுத்தியுள்ளனர். 

கங்கா ஸ்நானம் 
 நல்லெண்ணையிலும், தண்ணீரிலும், இயற்கை மூலிகை பொருட்களை சேர்த்து காய்ச்சி குளிப்பதால், நோய் வரும்முன் காத்து, உடலும், மனதும் புத்துணர்ச்சி பெறுகிறது.

தீபங்கள் 
மழைக்காலமாகிய இக்காலத்தில்ல பகல் பொழுது குறைவாக இருக்கும். இருள் அதிகமாக இருக்கும். நல்லெண்ணெய் கொண்டு நிறைய தீபங்கள் ஏற்றும் போது, நல்ல ஒளி கிடைக்கும்.  இதை பார்ப்பதால் கண்களுக்கும், சுவாசிப்பதால்  உடலுக்கும் நன்மை.

பட்டாசு 
மழைக்காலத்தில், விஷ ஜந்துக்கள், வீட்டு தோட்டங்களிலும், வீட்டிற்கு அருகாமையிலும் இருந்தாலும், பட்டாசு சப்தத்தினால் அவை வெளியேறிவிடும். அவற்றால் நமக்கோ, நம்மால் அவைகளுக்கோ, பாதிப்பு ஏற்படாது. சபரிமலைக்கு காடு வழி பயணம் செய்யும்போது, வெடி வழிபாடு செய்வதற்கான காரணங்களில் இதும் ஒன்று.

தீபாவளி மருந்து 
மழைக்காலங்களில், நமது ஜீரண சக்தியானது குறைவாக இருக்கும். மேலும் அதிகமாக சிற்றுண்டிகள், காரசாரமான உணவுகள் சாப்பிடஆசை ஏற்படும். எனவே நல்ல ஜீரண சக்தி கிடைப்பதற்குண்டான லேகியம் மற்றும் தரமான உடலுக்கு ஒத்துக்கொள்கின்ற இனிப்பு, கார வகைகளை, சுகாதாரமான முறையில் வீட்டிலேயே பெரியவர்கள் செய்கின்றனர்

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP