ஏடிஎம்கள் படுத்தும் பாடு

ஒருவர் வங்கியில் பரிமாற்றம் செய்ய வேண்டுமென்றால் குறிப்பிட்ட வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமலேயே பண பரிவர்த்தனை செய்து கொள்ளும் வகையில் தான் ஏடிஎம்கள் தொடங்கப்பட்டன.
 | 

ஏடிஎம்கள் படுத்தும் பாடு

இன்றைய நவீன  உலகில் மனிதர்களுக்கு நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம் போதவில்லை என்று தான் கூற வேண்டும். நாகரீகம் வளர வளர மனிதனின் தேவைகளும் அதிமாகின. 1980களில் ஒருவர் வங்கியில் பரிமாற்றம் செய்ய வேண்டுமென்றால் குறிப்பிட்ட அந்த வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டியிருந்து. மேலும் வங்கியில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருந்தது.

இந்நிலையில் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமலேயே பண பரிவர்த்தனை செய்து கொள்ளும் வகையில் தான் ஏடிஎம்கள் தொடங்கப்பட்டன. இதனால் வங்கி ஊழியர்களுக்கும் பணிச்சுமை கு‌றைந்தது. வங்கி நிர்வாகத்துக்கும் நடைமுறைச் செலவுகள் குறைந்தன.

 இந்நிலையில் ஏடிஎம்களில் உள்ள சில குறைபாடுகளால் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலை நாடுகளில் பாதுகாப்பு காரணங்கள் கருதி ஏடிஎம்களை நிர்வகிக்கும் பணிகள், அதாவது அந்த இயந்திரத்தில் பணம் நிரப்புதல் போன்ற பணிகள் தனியாரிடம் விடப்பட்டன.

ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் ஏடிஎம் தொடர்பான குற்றங்கள் குறைவு தான் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் படி ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றிற்கு 3 முறை மட்டுமே எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்க முடியும்.

மற்ற வங்கிகளுக்குச் சொந்தமான ஏடிஎம்களில் மாதம் ஒன்றுக்கு 3 முறைக்கு மேல் பணம் எடுத்து விட்டால் அடுத்த முறை பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து சேவை கட்டணமாக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.

ஆனால் உண்மை நிலை என்னெவென்றால் பெரும்பாலான ஏடிஎம்கள் சரியாக பராமரிக்கபடாமல், சரியான கால இடைவெளியில் பணம் நிரப்பப்படாமல் உள்ளன.

 ஒருவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்முக்கு சென்றால் ஒன்று அந்த ஏடிஎம் மில் பணம் இருக்காது அல்லது ஏடிஎம் இயந்திரம் வேலை செய்யாது.  பெரும்பாலும் இதுதான் தேசிய வங்கிகளுக்குச் சொந்தமான ஏடிஎம்களின் நிலை. 

இதனால் அந்த வாடிக்கையாளர் வேறு ஒரு வங்கியின் ஏடிஎம்க்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் ஏடிஎம்களில் எடுக்கப்படும் பணத்தில் ஏதாவது சேதம் இருந்தால் அதை வங்கிகளில் மாற்ற முடியாது.

தனியார் பராமரிப்பில் ஏடிஎம்கள் உள்ளதால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம்களை ஏன் தனியார் பராமரிப்பில் விட்டுள்ளது, அவற்றை அந்தந்த வங்கிகளே நிர்வகிக்கலாமே. அதில் என்ன பிரச்னைகள் உள்ளன என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP