விநாயகர் சதுர்த்தி: வித விதமான கொழுக்கட்டைகள்!

விநாயகர் சதுர்த்தியில் பிரசித்திப் பெற்றது கொழுக்கட்டை. அன்றைய தினம் எல்லோர் வீட்டிலும் கொழுக்கட்டை செய்து விநாயகருக்குப் படைப்பார்கள். இதோ உங்களுக்காக சில கொழுக்கட்டை ரெசிப்பிகள்.
 | 

விநாயகர் சதுர்த்தி: வித விதமான கொழுக்கட்டைகள்!

விநாயகர் சதுர்த்தியில் பிரசித்திப் பெற்றது கொழுக்கட்டை. அன்றைய தினம் எல்லோர் வீட்டிலும் கொழுக்கட்டை செய்து விநாயகருக்குப் படைப்பார்கள். இதோ உங்களுக்காக சில கொழுக்கட்டை ரெசிப்பிகள். இவற்றை முயற்சி செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்!


பிடி கொழுக்கட்டை 

விநாயகர் சதுர்த்தி: வித விதமான கொழுக்கட்டைகள்!

தேவையானப் பொருட்கள்: அரிசி மாவு - 1/2 கப், வெல்லம் - 1/4 கப், தண்ணீர் - 1 1/4 கப், துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை, எண்ணெய் - சிறிது

செய்முறை: முதலில் வெல்லத்தைத் தட்டி நீரில் போட்டு அடுப்பில் வைத்து, கரைய வைக்க வேண்டும். கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டி, ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் ஏலக்காய் பொடியைத் தூவவும். பின்பு தீயை குறைத்து, அதில் அரிசி மாவை மெதுவாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கிளறி விட வேண்டும். மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வேளையில் அடுப்பை அணைத்து விட வேண்டும். மாவானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு, மாவை கொழுக்கட்டையாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பிடி கொழுக்கட்டை ரெடி!

தேங்காய் கொழுக்கட்டை 

விநாயகர் சதுர்த்தி: வித விதமான கொழுக்கட்டைகள்!

தேவையான பொருட்கள் : மாவு பச்சரிசி - 1 கப், தேங்காய் -1 மூடி, வெல்லம் - 150 கிராம், ஏலக்காய் - 5,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. 

செய்முறை : பச்சரிசியை களைந்து நீர் வடித்து, ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்து பின் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். மாவு எத்தனை கப் உள்ளதோ அந்த அளவு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, மிதமான தீயில் மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகளின்றி கிளறி இறக்கி ஆறிய பின் கையினால் அழுத்தி பிசைய வேண்டும். எல்லா வகை பூர்ணம் கொழுக்கட்டைகளுக்கும் மாவு தயாரிக்கும் விதம் இதுதான். கொதி நீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீருடன் தேங்காய் பூ சேர்த்து கிளறி ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் வற்றி வரும் போது இறக்கவும். மாவை வாழையிலையில் தட்டி நடுவில் பூர்ணம் வைத்து கிண்ணம் போல் குவித்து மூட வேண்டும். இட்லித்தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்க எடுக்க வேண்டும்.தேங்காய் பூர்ண கொழுக்கட்டை ரெடி.

(இதே முறையைப் பின்பற்றி தேங்காய்க்கு பதில், எள், நவதானியம், ட்ரை ஃப்ரூட்ஸ், பருப்பு என எதை வேண்டுமானாலும் வைத்து கொழுக்கட்டை செய்யலாம்)


சம்பா ரவை பிடி கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி: வித விதமான கொழுக்கட்டைகள்!

தேவையானவை: சம்பா ரவை – ஒரு கப், வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சோம்பு  – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் ரவையைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், காய்ந்த மிளகாய், சோம்பு, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். அதில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, ரவையை மெதுவாகச் சேர்த்துக் கிளறவும். ஆறியதும், பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP