குரூப் வீடியோ கால் வசதி கொண்டுவந்த வாட்ஸ்ஆப்

ஒரே நேரத்தில் நான்கு பேருடன் வீடியோ அல்லது ஆடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது.
 | 

குரூப் வீடியோ கால் வசதி  கொண்டுவந்த வாட்ஸ்ஆப்

சமூக வலைத்தளங்களில் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்கு இந்த வாட்ஸ்ஆப் . ஒரே நேரத்தில் நான்கு பேருடன் வீடியோ அல்லது ஆடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது.

உலகளவில் குறுஞ்செய்தி செயலிகளில் முதல்  இடத்தை பெற்ற வாட்ஸ்ஆப்பை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதைத்தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை அந்நிறுவனம் F8 என்னும் வருடாந்திர தொழில்நுட்ப மாநாட்டில் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த மே மாதம் நடந்த ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 மாநாட்டில் குரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதிகள் உருவாக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி, உலகம் முழுவதுமுள்ள ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் அதிகபட்சம் நான்கு பேருடன் வீடியோ மற்றும் ஆடியோ கால்களை பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது.வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தி சேவையை போன்றே இந்த வீடியோ/ ஆடியோ சேவையும் முழுவதும் என்க்ரிப்ட் செய்யப்பட்டது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு நபர்களுக்கிடையே பரிமாறப்படும் தகவல்களை அந்த இணையதளமோ அல்லது செயலியை நடத்துபவர்கள் உள்ளிட்ட எவரும் காண முடியாது. இதுவே என்க்ரிப்ட் எனப்படும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP