இந்த போன்களில் இனி வாட்ஸ்ஆப் இயங்காது

வாட்ஸ் ஆப் இனிமேல் இந்த போன்களில் இயங்காது
 | 

இந்த போன்களில் இனி வாட்ஸ்ஆப் இயங்காது


குறிப்பிட்ட சில போன் மாடல்களில் இனி வாட்ஸ்ஆப் சேவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் Nokia Symbian S60 மாடலில் வாட்ஸ் ஆப் செயல்படாது என்ற அறிவிப்பு வெளியானது. தற்போது பிளாக்பெரி os போன்கள், பிளாக்பெரி 10, மைக்ரோ சாப்ட் 8.0 ஆகியனவற்றில் இயங்கும் போன்களில் அடுத்த ஆண்டின் துவக்கத்திலிருந்து வாட்ஸ் ஆப் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாட்ஸ் ஆப் புது வெர்ஷன் இந்த மாடல்களில் இயங்கும் அளவு இந்த போன்கள் வடிவமைக்கப்படவில்லை. இதனால் இந்த போன்களில் வாட்ஸ் ஆப் சேவையை டிசம்பர் 31, 2017 இருந்து பயன்படுத்த முடியாது.

அதேபோல் நோக்கியா S40 போன்களில் வாட்ஸ் ஆப் சேவை டிசம்பர் 18, 2018 முதல் மற்றும் ஆண்ட்ராய்டு ஜிஞ்சர்பிரட் v2.3.7 போன்களில் வருகின்ற 2020 பிப்ரவரி 1 முதல் வாட்ஸ் ஆப் சேவை செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டு  உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP