செய்திகளை நேரலையாக வழங்கும் ட்விட்டர்!

இன்றைய செய்தி உலகின் முக்கிய காரணியாக விளங்கும் ட்விட்டர் நிறுவனம் செய்திகளை நேரலையாக வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
 | 

தொலைக்காட்சிகளை முந்திக்கொண்டு செய்தி, நிகழ்ச்சி, சம்பவங்கள் ஆகியவற்றை உடனுக்குடனும் மக்களுக்கு வழங்கிவரும் ட்விட்டர் நிறுவனம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சீரியஸ் மேட்டர் முதல் சில்லி மேட்டர் வரை அனைத்துமே ட்விட்டரில் பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது. ட்விட்டரில் இதைவிட சுவாரஸ்யாமான விஷயம் என்னவென்றால் ட்ரெண்டிங்! கருத்து சொல்வதில் தொடங்கி கலாய்க்கும் வேலைகள் வரை அனைத்துமே இதில் இடம்பெற்றுவிடுகிறது. ட்விட்டர் வாசிகளை மேலும் கவர, நேரலையை பார்க்கவும், நேரலையாக வீடியோக்களையோ அல்லது எங்கோ நடக்கும் சம்பவங்களையோ இனி ட்விட்டரில் இடம்பெற செய்யமுடியும். 

ட்விட்டரின் இந்த லைவ் ஸ்ட்ரீமிங் வசதியானது அடுத்த மாதம் முதல் அமெரிக்காவில் தொடங்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கையில் மொபைலை வைத்துக்கொண்டு அலையும் இளைஞர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை ஏதேனும் விபத்து நேர்ந்தால் நேரலையில் ஒளிபரப்பமுடியும். ஐஓஎஸ், ஆண்டிராய்டு ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இந்த வசதி அப்டேட் செய்யப்படும் என்றும் விரைவில் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக கடந்த 2015ல் ட்விட்டர் நிறுவனம் மொமெண்ட் வசதியையும், 2017இல் ட்விட்டரில் டைப் செய்யும் எழுத்துக்களின் எண்ணிக்கையை 280ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது 

தொலைக்காட்சிகளை முந்திக்கொண்டு செய்தி, நிகழ்ச்சி, சம்பவங்கள் ஆகியவற்றை உடனுக்குடனும் மக்களுக்கு வழங்கிவரும் ட்விட்டர் நிறுவனம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சீரியஸ் மேட்டர் முதல் சில்லி மேட்டர் வரை அனைத்துமே ட்விட்டரில் பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது. ட்விட்டரில் இதைவிட சுவாரஸ்யாமான விஷயம் என்னவென்றால் ட்ரெண்டிங்! கருத்து சொல்வதில் தொடங்கி கலாய்க்கும் வேலைகள் வரை அனைத்துமே இதில் இடம்பெற்றுவிடுகிறது. ட்விட்டர் வாசிகளை மேலும் கவர, நேரலையை பார்க்கவும், நேரலையாக வீடியோக்களையோ அல்லது எங்கோ நடக்கும் சம்பவங்களையோ இனி ட்விட்டரில் இடம்பெற செய்யமுடியும். 

ட்விட்டரின் இந்த லைவ் ஸ்ட்ரீமிங் வசதியானது அடுத்த மாதம் முதல் அமெரிக்காவில் தொடங்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கையில் மொபைலை வைத்துக்கொண்டு அலையும் இளைஞர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை நேரலையில் ஒளிபரப்பமுடியும். ஐஓஎஸ், ஆண்டிராய்டு ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இந்த வசதி அப்டேட் செய்யப்படும் என்றும் விரைவில் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக கடந்த 2015ல் ட்விட்டர் நிறுவனம் மொமெண்ட் வசதியையும், 2017இல் ட்விட்டரில் டைப் செய்யும் எழுத்துக்களின் எண்ணிக்கையை 280ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP