அரை மணிநேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பயணிக்கலாம்!

விமான பயணா? என வாய்பிழக்கும் நிலை மாறி தற்போது அருகில் உள்ள நகருக்கு செலவே ஒரு மணி நேர விமான பயணத்தை மெற்கொள்ளும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில் விமான பயணத்திற்கு பாய் சொல்லிவிட்டு ராக்கெட் பயணத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
 | 

அரை மணிநேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பயணிக்கலாம்!

அரை மணிநேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பயணிக்கலாம்!

விமான பயணமா? என வாய்பிளந்த காலம் மாறி, தற்போது 100 கிமீ தூரத்திற்கே விமானத்தில் செல்லும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில் விமான பயணத்திற்கு குட்பை சொல்லிவிட்டு, ராக்கெட் பயணத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் விண்வெளி ஆய்வுகளிலும், ராக்கெட் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் ஈலன் மஸ்க், அரசின் உதவியுடனும், உதவியின்றியும் இதுவரை பல்வேறு ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பியுள்ளார். மேலும் பல ஆய்வுகளில் நாசாவுடன் மல்லுக்கட்டும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பவும் திட்டமிட்டு வருகிறது.  

இந்நிலையில் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு பயணிக்க ராக்கெட் பயணத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக ஸ்பேஸ் எக்ஸ்  நிறுவனம் தெரிவித்துள்ளது . இன்னும் 10 வருடங்களில் இந்த திட்டம் சாத்தியமாகுமாம். நியூயார்க் - ஷாங்காய் நகரங்களுக்கு இடையே விமானத்தில் சென்றால் 15 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த ராக்கெட் பயணத்தின் மூலம் 7,400 மைல் தூரத்தை வெறும் 39 நிமிடங்களில் கடந்து விடாலாம் என்றும், லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு 29 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்றும் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த ராக்கெட் பயணம் தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP