ஏலியன்ஸ் வேட்டையில் இறங்கிய டெஸ் தொலைநோக்கி!

சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களை ஆய்வு செய்யும் வகையிலான டெஸ் எனப்படும் தொலைநோக்கி விண்வெளிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
 | 

ஏலியன்ஸ் வேட்டையில் இறங்கிய டெஸ் தொலைநோக்கி!

ஏலியன்ஸ் வேட்டையில் இறங்கிய டெஸ் தொலைநோக்கி!

சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களை ஆய்வு செய்யும் வகையிலான டெஸ் எனப்படும் தொலைநோக்கி விண்வெளிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.

உலகத்தில் மற்ற எந்த ஒரு நாட்டினருக்கும் இல்லாத பிரச்னை அமெரிக்கர்களுக்கு உண்டு. அவர்களுக்கு ஏலியன்ஸ் எனப்படும் வெளிகிரக மனிதர்கள் பற்றிய பயம் உண்டு. அவ்வப்போது பறக்கும் தட்டைப் பார்த்ததாக யாராவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்தநிலையில், சூரிய குடும்பத்துக்கு வெளியே ஏதேனம் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை கண்டறிய புதிதாக டெஸ் என்கிற ஒரு தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியுள்ளது அமெரிக்கா. ஃபுளோரிடா கேப் கெனரவலில் விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டெஸ் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

செலுத்தப்பட்ட சில நிமிடங்களில், ராக்கெட் புவி வட்டப்பாதையில் செயற்கைக் கோளை நிலைநிறுத்திவிட்டு, அட்லாண்டிக் கடலில் விழுந்தது. டெஸ் தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்துவதற்காக புத்தம் புதிய ஃபால்கன் ராக்கெட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொலைநோக்கியில் 10 சென்டிமீட்டர் அளவிலான 4 திறன்வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக 337 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. அண்டவெளியில் ஏலியன்கள் உள்ளனவா? என்பதை உறுதி செய்யும் வேலையையும் டெஸ் தொலைநோக்கி செய்யவுள்ளது. 

ஏலியன்ஸ் வேட்டையில் இறங்கிய டெஸ் தொலைநோக்கி!

சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் சுமார் 20 ஆயிரம் கோள்களை இந்தத் தொலைநோக்கி ஆய்வு செய்து முழு விவரங்களை பூமிக்கு அனுப்பும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. பிற நட்சத்திரக் குடும்பங்களில் பூமியை போன்ற கிரகங்களில் உயிரினம் உள்ளதா? உயிரினங்கள் வாழ சாத்தியமான கோள்கள் உள்ளனவா? என்பதை பற்றியும் டெஸ் ஆய்வு செய்யும். 

இனியாவது அமெரிக்கர்களின் சந்தேகம் தீர்க்கப்படுகிறதா என்று பார்ப்போம்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP