மேகத்தை போட்டோ எடுத்து அனுப்புங்க!- நாசா

இயற்கையை ரசிக்க தெரிந்தவர்களா நீங்கள்? அப்ப வானத்தில் இருக்கும் மேக கூட்டங்களை அழகாக போட்டோஸ் எடுத்து வரும் ஏப்ரல் 15 க்குள் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என நாசா அறிவித்துள்ளது.
 | 

நாசா, பூமியில் நடக்கும் கால நிலை மாற்றங்களை கண்டுபிடிக்க எர்த் ரேடியன்ட் எனர்ஜி சிஸ்டம் என்ற புதிய செயற்கைகோள்களை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இந்த செயற்கைகோள் தொடர்ந்து மேகங்களை ஆராய்ந்து, கால நிலை எப்படி மாறும் என்று ஆராய்ந்து வருகிறது. 

மேகத்தை போட்டோ எடுத்து அனுப்புங்க!- நாசா

இந்நிலையில் குளோப் (GLOBE) எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மேக கூட்டங்களை உலக முழுவதும் உள்ள மக்கள் சாதாரண மொபைல் போனில் போட்டோ பிடித்து அனுப்புங்கள் என நாசா கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக ''குளோப் அப்சர்வர்'' (GLOBE Observer) என்ற ஆப்பை நாசா உருவாக்கியுள்ளது. போட்டோ எடுத்து அந்த ஆப்பில் பெயர், புகைப்படம், முகவரியுடன் அப்லோடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒருவர் 10 மேக புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளது. சிறந்த புகைப்படங்கள் ஆய்வின் முடிவில் நாசாவினால் அங்கிகரிக்கப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. மேகத்தின் புகைப்படங்களை எடுக்க நீங்கள் ஒரு விஞ்ஞானி அல்லது ஆர்வமுள்ள புகைப்படக்கலைஞராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நாசாவின் விஞ்ஞானி கோலோன் ரோப்ஸ் குறிப்பிட்டார்,

மேகத்தின் வெளியில் இருந்து எடுக்கும் பொதுமக்களின் போட்டோஸ்களையும், வளிமண்டலத்தின் உட்பகுதியில் இருந்து எர்த் ரேடியன்ட் எனர்ஜி சிஸ்டம் செயற்கைகோள் அனுப்பும் போட்டோஸ்களையும் ஒப்பிட்டு காலநிலை மாற்றங்கள் தொடர்பான புதிய ஆய்வை மேற்கொள்ளபோவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP